ராம் படத்தில் நடித்த நடிகை தற்போது என்ன செய்கிறார் தெரியுமா?.. இன்ஸ்டாகிராமில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இயக்குநர் அமீர் இயக்கத்தில் உருவாகி வெளியான படம் தான் ராம். அந்த படத்தில் கதாநாயகியாக நடித்தவர் தான் கஜால்.  தெலுங்கில் முன்னணி நடிகையாகவும் வலம் வந்தார். அதன் பின்னர் தெலுங்கு நடிகர் அல்லாரி நரேஷ் என்பவருடன் காதல் சர்ச்சைகளில் சிக்கினார். அதனால் மனமுடைந்து போன அவர் தூக்க மாத்திரை சாப்பிடும் அளவிற்கு சென்றார்.மேலும், இவர் கடைசியாக 2011ம் ஆண்டு மணி மணி மோர் என்ற தெலுங்கு படத்தில் நடித்திருந்தார்.

சில ஹிந்தி சீரியல்களிலும் நடித்து வந்தார். அப்போது, அவருடன் சீரியலில் நடிக்கும், நடிகர் பைசல் அலிகான் என்பவரை காதலித்தார். இரண்டு வருடமாக இவர்கள் காதலித்து வந்த நிலையில், இரு வீட்டார் சம்மத்துடனும் இவர்களுடைய திருமணம் மும்பையில் நடைப்பெற்றது. அதற்க்கு பிறகு இவர் சினிமா பக்கம் தலை காட்டவில்லை.

மேலும், சமீப காலமாகவே சமூக வலைத்தளங்களில் கஜாலாவின் கவர்ச்சி புகைப்படங்கள் வெளியாகி வருகிறது. இதனால் மீண்டும் சினிமாவில் நடிப்பதற்காகவே இப்படி செய்கிறாரா என ரசிகர்கள் கேள்வி எழுப்புகின்றனர். நீண்ட இடைவெளிக்கு பிறகு இவரைக் கண்ட ரசிகர்கள் அடையாளமே தெரியவில்லை என்று கூறி வருகிறார்கள். அந்த புகைப்படங்கள் அனைத்தும் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வாரிய வெளியிட்டுள்ளார்.