ஐதராபாத்தில் கணவர் குடும்பத்தாரின் வரதட்சணை கொடுமை தாங்காமல் மனைவி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஐதராபாத் மாநிலத்தை சேர்ந்த மாருதி லண்டனில் பொறியாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 2014ம் ஆண்டு நாகமணி (34) என்பவரை திருமணம் செய்துகொண்டார். நாகமணி Thirmulgherry கிராமத்தில் வருவாய் ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். திருமணம் நடைபெற்ற போது நாகமணி, ரூ.2 லட்சம் பணமும், ஒரு லட்சம் மதிப்பில் தங்க நகைகளும் வரதட்சணையாக கொடுத்துள்ளார்.
ஆனால் அதன் பின்னரும், மாருதி தன்னுடைய பெற்றோருடன் சேர்ந்து கொண்டு கூடுதல் பணம் கேட்டு நாகமணியை அவமானப்படுத்தி வந்துள்ளனர். சமீபத்தில் நாகமணியின் குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் போயுள்ளது. இதனை காரணமாக வைத்துக்கொண்டு.
உன்னுடைய வீட்டிற்கு சென்று ரூ.7 லட்சம் வாங்கி வா என மாருதியின் தாயார் வரதட்சணை கொடுமை செய்ய ஆர்மபித்துள்ளார். இதில் மனமுடைந்த நாகமணி வீட்டில் ஆளில்லாத சமயம் விஷம் குடித்து தற்கொலை செய்துள்ளார்.
இந்த நிலையில் நாகமணியின் பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் தற்கொலைக்கு தூண்டுதல் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.