லண்டன் விமான நிலையத்தில் போலீசிடம் சிக்கிய பிரபல தமிழ்ப்பட நடிகைக்கு ஏற்பட்ட விபரீதம்..!! வெளியான அதிர்ச்சி தகவல்

லண்டனுக்கு படப்பிடிப்புக்காக சென்ற பிரபல நடிகை ஸ்ரேயா அங்குள்ள போலீசிடம் சிக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. இயக்குனர் மாதேஷ் இயக்கத்தில் சண்டக்காரி என்ற திரைப்படத்தில் நடிகை ஸ்ரேயா கதாநாயகியாகவும், நடிகர் விமல் கதாநாயகனாகவும் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு, லண்டன் விமான நிலையத்தில் சமீபத்தில் நடந்தது. அப்போது குடியுரிமை பகுதியை கடந்து, ஸ்ரேயா சென்று விட்டார். உடனடியாக, போலீசார் ஸ்ரேயாவை சூழ்ந்தனர். உரிய ஆவணங்கள் மற்றும் அனுமதி இல்லாமல், பாதுகாக்கப்பட்ட பகுதிக்குள் நுழைந்தது ஏன் என, ஸ்ரேயாவை கேள்விகளால் துளைத்து எடுத்துள்ளனர்.

இதையடுத்து பதறிய நடிகர் விமல் உள்ளிட்ட படக்குழுவினர் அதிகாரிகளிடம் உரிய ஆவணங்களை காட்டி விளக்கினார்கள். இதையடுத்து பொலிஸ் பிடியில் இருந்த ஸ்ரேயா விடுவிக்கப்பட்டார். இச்சம்பவம், படக்குழுவினரை அதிர்ச்சி அடையச் செய்து விட்டது.