லாட்டரி அதிபர் வீட்டின் பாதாள அறையில் கோடிக்கணக்கில் பணம், தங்க குவியல் இருந்ததா? அவர் மனைவி அளித்த பதில்

கோவை லாட்டரி அதிபர் மார்ட்டின் வீட்டில் பாதாள அறை எல்லாம் இல்லை எனவும் வீட்டில் மொத்தமாகவே ரூ.98,820 தான் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் மனைவி லீமா ரோஸ் கூறியுள்ளார். லாட்டரி தொழிலதிபர் மார்ட்டின் சம்பந்தப்பட்ட இடங்களில் கடந்த வாரம் முதல் வருமானவரித்துறையினர் தொடர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சோதனையில் கணக்கில் வராத பல நூறு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியானது மேலும், மார்ட்டின் வீட்டில் பாதாள அறை எங்கும் கட்டுக் கட்டாக பணம் இருப்பதாகவும், தங்க குவியல் இருப்பதாகவும் கூறப்பட்டது. இதுகுறித்து, மார்ட்டின் மனைவி லீமா ரோஸ் கூறுகையில்,

மார்ட்டின் வீட்டில் இருந்து கோடிக்கணக்கான பணம் எடுக்கப்பட்டதாக பரவி வரும் வீடியோ போலியானது. மார்ட்டின் வீட்டில் பாதாள அறை எல்லாம் இல்லை. வருமானவரித்துறையினர் மொத்தமாகவே எங்களது வீட்டில் இருந்து ரூ.98,820 தான் பறிமுதல் செய்தனர் என கூறியுள்ளார்.