வயிற்று வலி..! கழிப்பறைக்கு அவசரமாக சென்ற நபர்! வெளியே வந்த 32 அடி நீள உயிரினம்! அதிர வைக்கும் சம்பவம்!

தாய்லாந்து நாட்டில் கிரிஸ்தடா ராட்பர்சோம் 44 வயது புகைப்பட கலைஞர் வசித்து வந்துள்ளார். இவர் சமீபத்தில் ஒருநாள் கழிவறைக்கு சென்றிருந்தபோது அவருடைய ஆசனவாயுவில் இருந்து ஏதோ ஒன்று வெளிவருவதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். வயிற்று அழற்சியால் பாதிக்கப்பட்ட இவர் அது சம்மந்தமாக ஏதோ வெளிவருவதாக எண்ணியுள்ளார். ஆனால் அதனை வெளியே இழுத்த போது 32 அடி நீளமான நாடாப்புழு என்பதை கண்டறிந்துள்ளார். மனிதர்களின் உடலில் இருந்து நாடாப்புழு வெளி வருவது ஒன்றும் புதிதல்ல. சமீபத்தில் சீனாவில் ஒருவருடைய வயிற்றிலிருந்து 700க்கும்

மேற்பட்ட நாடாப்புழுக்கள் வெளியேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. மோசமான உணவுப் பழக்கங்களினால் வயிற்றில் நாடாப்புழு வளர்வதாக மருத்துவர்கள் கூறி வருகின்றனர். இந்த செய்தியானது தாய்லாந்து நாட்டின் ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.