வருங்கால மனைவியுடன் முதன்முதலாக விஷால்…. தீயாய் பரவும் புகைப்படங்கள்! இந்த நடிகையா?

நடிகர் விஷால் ஆந்திராவைச் சேர்ந்த நடிகை அனிஷா ரெட்டியை திருமணம் செய்ய இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நடிகர் சங்க செயலாளர், தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால், நடிகர் சங்கத்திற்கு என சொந்தமாக கட்டிடம் கட்டி முடிந்தவுடன் தான் திருமணம் செய்து கொள்ளவிருப்பதாக உறுதியுடன் இருந்தார். இந்த நிலையில் நடிகர் சங்க கட்டிடம் முடிவடையும் நிலையில் உள்ளதால் அவருடைய பெற்றோர் அவருக்கு பெண் பார்த்தனர். நடிகை வரலட்சுமியை விஷால் காதலித்து வருவதாகவும், அவரைத் தான் திருமணம் செய்து கொள்ள உள்ளதாகவும் பல செய்திகள் உலாவின. ஆனால், அதனை வரலட்சுமி தரப்பு தொடர்ந்து மறுத்து வந்தது.

இந்நிலையில் தற்போது விஷாலுக்கு ஐதராபாத்தை சேர்ந்த தொழிலதிபரின் மகளும் நடிகையுமான அனிஷா ரெட்டியை  விஷால் திருமணம் செய்துகொள்ள போவதாக  செய்திகள் வெளியாகி உள்ளது. மேலும் விஷாலுடன் அனிஷா எடுத்துக் கொண்ட சில புகைப்படங்களும் பரவி வருகிறது.  இதுகுறித்த செய்திகள் கசிந்தாலும், அதிகாரபூர்வ அறிவிப்பு வரும் வரை பொறுமை காக்க விஷால் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இந்த நிலையில் நேற்று இரவு முதல் விஷால், அனிஷா இணைந்து உள்ள புகைப்படங்கள் வெளியாகி விஷால்-அனிஷா திருமணத்தை உறுதி செய்துள்ளது. மேலும் நடிகர் சங்க கட்டிடத்தில்

வரும் பிப்ரவரி அல்லது மார்ச்சியில் விஷால்-அனிஷா திருமணம் நடைபெறும் என்றும், சரியான திருமண தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. வைரலாகும் புகைப்படங்கள் இதோ