வளைகாப்பிற்கு முதல் நாள்..! கேட்க கூடாததை கேட்ட மாமியார்! நடு வீட்டில் மருமகள் செய்த விபரீத செயல்! செங்கல்பட்டு அதிர்ச்சி!

காஞ்சிபுரம் மாவட்டம், தேனம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன். தனியார் நிறுவன ஊழியரான இவர், சில மாதங்களுக்கு முன்பாக, பிரியா என்ற பெண்ணை காதல் திருமணம் செய்துகொண்டார். இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். அதேசமயம், குடும்ப வாழ்க்கை சுமூகமாக சென்ற நிலையில், பிரியாவின் நகைகளை வாங்கி மணிகண்டன் அடகு வைத்ததாகக் கூறப்படுகிறது.

இதன்பேரில் அடிக்கடி, பிரியாவுக்கும், மணிகண்டன் மற்றும் மணிகண்டனின் தாய் எல்லம்மாளுக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. இதற்கிடையே, கர்ப்பமான பிரியாவுக்கு, வளைகாப்பு நடத்த மணிகண்டன் ஏற்பாடு செய்தார். வளைகாப்பு நேற்று (டிசம்பர் 6) நடக்க இருந்த நிலையில், திடீரென பிரியா யாரும் இல்லாத நேரத்தில் வீட்டில் தூக்கில் தொங்கியுள்ளார். இதன்பேரில், போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்தனர்.

அப்போது, அடகு வைத்த நகைகளை மீட்டு தரக் கேட்டு, பிரியா வாக்குவாதம் செய்தபோது, மணிகண்டன் மற்றும் அவரது தாய் எல்லம்மாளும் சண்டையிட்டுள்ளனர். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான பிரியா திடீரென இப்படி செய்து கொண்டதாக தெரியவந்தது. இதன்பேரில், அவரை மணிகண்டன், எல்லம்மாளை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.