“வாணி போஜனை கல்யாணம் பண்ணணுனா இப்படிப்பட்ட பையனாக இருக்கணுமாம்”…! – நோட் திஸ் பாயிண்ட்…!

தமிழ் சினிமாவிற்கு புது முகங்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போகிறது என்று தான் சொல்ல வேண்டும். படத்திற்கு ஒரு நடிகை அறிமுகம் ஆகிறார்கள் என்பது தான் உண்மை. இந்நிலையில்  வணிபோஜன் தமிழ் சினிமா ரசிகர்கள் வரவேற்கும் புதுமுக நடிகை. இவருடைய நடிப்பினால் சின்னத்திரையில் மக்களிடம் ஒரு இடத்தை பிடித்தார்.

ஜெயா டிவியில் ஒளிபரப்பான மாயா என்ற தொடர் மூலம் அறிமுகம் ஆகி தற்பொழுது சன் டிவியின் தெய்வமகள் சீரியலில் சத்யாவாக நடித்து பிரபலம் ஆனார். வணிபோஜன் “ஓ மை கடவுளே” என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் ஆனார். அந்த அப்படத்தில் அவருடைய நடிப்பிற்கு , கதாபாத்திரத்திற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது.

சமீபத்தில் ஒரு பிரபல யூடியூப் சேனல் எடுத்த பேட்டி ஒன்றில் “உங்களுக்கு எப்படிப்பட்ட பையன் வாழ்கை துணையாக வர வேண்டும் என்று கேட்டார் தொகுப்பாளர். அதற்கு வாணி “ஜாலியா குடும்பத்தோட திருவிழா போவாங்க, சாதாரணமாக இருப்பாங்க அந்த பையன் போதும்” என்று பதில் கூறினார்.