விஜய்யை பார்ப்பதற்கு மூன்றாண்டுகள் சேர்த்து வைத்த பணம்… கொ ரோனா நிவாரணத்திற்கு கொடுத்த சிறுவன்! எவ்வளவு தெரியுமா?

விஜய்யை பார்ப்பதற்காக தான் சேர்த்து வைத்த பணத்தினை சிறுவன் ஒருவன் கொரோனா நிவாரணத்திற்கு உதவித்தொகையாக கொடுத்துள்ளார். திருப்பூர் போயம்பாளையம் அவினாசி நகரைச் சேர்ந்த ரவிக்குமார், ஜோதிமணி தம்பதிகளின் மகன் உபநிசாந்த்.


8ம் வகுப்பு படித்துவரும் இச்சிறுவன், நீச்சல் போட்டியில் கலந்து கொண்டு பல பரிசுகளை வாங்கியுள்ளார். உபநிசாந்த் முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவில் நடந்த நீச்சல் போட்டியில் கடந்த மூன்று ஆண்டுகளாக கலந்து கொண்டு, மூன்று முறையும் முதல் பரிசாக ரூ.3000 பெற்றுள்ளார்.விஜய்யின் தீவிர ரசிகரான இவர், தற்போது தான் சேர்த்து வைத்த பணத்தினை கொரோனா நிவாரண நிதிக்கு கொடுத்துள்ளார்.

இதுகுறித்து சிறுவனின் தந்தை கூறுகையில், விஜய்யை பார்க்க வேண்டும் என்ற ஆசைப்பட்டவனிடம், அதற்கு அதிக பணம் என்று கூறினேன். அதற்காக தான் நீச்சல் போட்டியில் கலந்து கொண்டு சேர்த்து வைத்த பணத்தினை தற்போது கொரோனாவிற்காக கொடுத்துள்ளான் என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.