
நடிகர் தளபதி விஜயின் வீட்டிற்கு நடிகர் அதர்வாவின் தம்பி மாப்பிள்ளை ஆகப்போகிறார் என்பதுதான் தற்போது கோலிவுட்டின் ஹாட் டாபிக்.நடிகர் முரளியின் மகன் அதர்வா.சமந்தாவுக்கு கதாநாயகனாக பண காத்தாடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் அதர்வா.அதன்பிறகு பல படங்களில் நடித்துள்ள அதர்வா தற்போது கடைசியாக தமிழில் 100 திரைப்படத்திலும் தெலுங்கில் வெளியான ஜிகர்தண்டா திரைப்படத்தின் ரீமேக்கில் கதாநாயகனாகவும் நடித்தார்.
இந்தநிலையில் தற்போது திரையுலகில் பெரிய குடும்பங்களில் ஒன்று நடிகர் விஜய்யின் குடும்பம் அவர் தந்தை எஸ் ஏ சந்திரசேகர் பெரிய தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் என்பது நாம் அறிந்ததே.தற்போது முரளி குடும்பமும் எஸ் ஏ சந்திரசேகரின் குடும்பமும் சம்பந்திகள் ஆகப்போகிறார்கள்.மேலும் தற்போது வருகிற 6ஆம் தேதி சென்னையில் உள்ள லீலா பேலஸில் நிச்சயதார்த்தம் நடக்கப்போகிறது. நடிகர் முரளியின் இளைய மகன் ஆகாஷ்.இவர் சிங்கப்பூரில் எம்பிஏ படித்துள்ளார்.இவர் படித்த அதே கல்லூரியில் சந்திரசேகரின் மகள்வழிபேத்தி சினேகாவும் படித்து வருகிறார்.
இருவரும் காதல் வயப்பட்டு தற்போது வீட்டு சம்மதத்துடன் திருமணம் நடக்கப்போவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. விஜயின் “காதலுக்கு மரியாதை” படத்தின் கிளைமாக்ஸ் மாதிரி. இவர்களுடைய காதலுக்கு போராடி கடைசியில் இருவீட்டாரிடம் சம்மதம் வாங்கி உள்ளார்கள்.
மேலும் இவர்களது நிச்சயதார்த்தத்திற்கு பல திரையுலக பிரபலங்கள் கலந்துகொள்ளபோவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.விஷயம் தெரிந்த விஜய் இருவருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளதாக தெரிகிறது.