ஹைதராபாத் விமான நிலையத்தில் சின்னத்திரை நிடிகை ஒருவரை ஆபாசமாக புகைபடமெடுத்ததால் ஆசிரியர் ஒருவரை சின்னத்திரை பிரபலங்கள் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விஜய் பிரகாஷ் ஒரு கல்லூரி பேராசிரியரான இவர் சென்னையிலிருந்து ஹைதராபாத் வரை செல்லும் விமானத்தில் பயணித்துள்ளார்,இந்நிலையில் அதே விமானத்தில் பயணம் செய்த சின்னத்திரை துணை நடிகை ஒருவரை ஆபாசமாக புகைப்படம் எடுத்துள்ளார். இதனை கண்காணித்த மற்றொரு நடிகை, அவரது செல்போனிலிருந்து அவற்றை நீக்குமாறு விஜய் பிரகாஷிடம் கூறியுள்ளார்.
ஆனால், தான் புகைப்படம் எடுக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த நடிகை, அவருடன் வந்த துணை நடிகர் சையத் முன்வரும் சேர்ந்து அவரை சரமாரியாக நடிகை தாக்கினார். பின்னர் விமான நிலைய பொலிசாரிடம் இதுதொடர்பாக புகார் செய்தார்.
இதைதொடந்து போலீசார் அந்த ஆசிரியரின் தொலைபேசியை பார்த்த போது பல கோணத்தில் அவர் அந்த நடிகையை புகைப்படம் எடுத்து தெரியவந்தது.பின், புகைப்படங்களை அழித்து விட்டு அந்த பேராசிரியரை எச்சரித்து அனுப்பியுள்ளனர்.