
அப்பாவின் சப்போர்ட் இல்லாமல், தன்னுடைய முயற்சியில் முன்னேறியவர் ஸ்ருதிஹாசன். தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்களான விஜய், அஜித், சூர்யா ஆகியோருடன் நடித்து சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர். தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்திருக்கும் இவர் பிரபல தமிழ் நடிகர் கமல்ஹாசனின் மகள் என்பது அனைவருக்கும் தெரிந்தது.
தெரியாத விஷயம் ஒன்று உண்டு. அது என்ன தெரியுமா? சுருதி ஹாசன் முதலில் இசை அமைப்பாளராக அறிமுகமாகி அதன் பிறகுதான் நடிகையாக கொடிகட்டி பறந்தவர். அதுமட்டுமல்லாமல் இவருக்கு தெலுங்கிலும் மார்க்கெட் அதிகம். சுருதி ஹாசன் கடந்த ஒரு வருடமாக எந்த படங்களிலும் கமிட் ஆகாமல் இருந்தார். நல்ல கதையம்சம் கொண்ட படங்கள் வாய்க்காத தால் சும்மாவே இருந்தார். தற்போது விஜய் சேதுபதியுடன் இணைந்து
“லாபம்” என்ற தமிழ் படத்தில் நடித்து வருகிறார்.இந்நிலையில் நடிகை ஸ்ருதிஹாசன், நேற்று பிரபல விருது விழாவிற்கு வந்திருந்தார். அப்போது அவர் அணிந்து வந்திருந்த டிரஸ் படு கவர்ச்சியாகவும், உடல் உறுப்பு வெளியே தெரியும்படியாகவும் இருந்தது.அவர் அணிந்திருந்த டிரஸ் வந்திருந்தவர்கள் பலரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது.