விவாகரத்தான நடிகை ஹோட்டல் அறையில் தற்கொலை!அதிர்ச்சியில் ரசிகர்கள்!

சில ஆண்டுகளாகத் தொடர்ந்து நடிகர், நடிகைகள் தற்கொலைகள் செய்து கொள்ளும் முடிவை எடுப்பது சின்னத்திரை கலைஞர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சின்னத்திரையில் பிரபலமாக நடித்துகொண்டிருந்த பல நடிகைகள் கடந்த சில ஆண்டுகளில் தற்கொலை செய்து கொண்டனர். நடிப்பதற்கு தொடர்ந்து வாய்ப்பு கிடைக்காமல் போகவே மன உளைச்சலுக்கு ஆளாகி நடிகை, நடிகர்கள், சின்னத்திரை தொழில் நுட்பக்கலைஞர்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர்.இந்நிலையில்  சிலிகுரியில் உள்ள பிரபல ஹோட்டல் அறையில் நடிகை தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

பெங்காலி தொலைக்காட்சி மற்றும் திரைப்பட நடிகை பாயல் சக்ரபூர்த்தி திரைப்பட ஷூட்டிங்காக கேங்டாக் செல்ல வேண்டி இருந்தது. இதனால் அவர் சிலிகுரியில் உள்ள பிரபல ஹோட்டலில் அறை எடுத்து தங்கி இருந்தார். ஹோட்டல் அறைகளை சுத்தம் செய்வதற்காக ஊழியர்கள் வந்து கதவை தட்டியபோது, அவர் கதவை திறக்கவில்லை. முதலில் இவர் அசந்து தூங்குவதாக நினைத்து கொண்டு அங்கிருந்து சென்று சென்றுவிட்டனர் ஊழியர்கள்.

பின் சில மணிநேரம் கழித்து, மீண்டும் பல முறை கதவை தட்டியும் அவர் கதவை திறக்காததால், ஹோட்டல் ஊழியர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக அங்கு விரைந்து வந்த போலீசார், கதவை உடைத்து கொண்டு உள்ளே சென்று பார்த்தனர். அப்போது பாயல் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டது தெரியவந்தது.சின்னத்திரை சீரியல்கள் மூலம் மிகவும் பிரபலமான பாயல் சக்ரபூர்த்தி (38), திரைப்படங்களிலும் நடித்துள்ளார். மேலும் வெப் சீரீஸ் தொடர் மற்றும் சில மேடை நிகழ்சிகளையும் நடத்தி வந்தார்.

இந்நிலையில் இவருடைய மரணம் குடும்பத்தினர் மற்றும் சக நடிகர், நடிகைகள் மத்தியில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாயல் சக்ரபூர்த்தி ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து பெற்றவர். இவருக்கு ஒரு மகன் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.தற்போது போலீசார் இவருடைய மரணத்திற்கு காரணம் என்ன? என்பதை தீவிரமாக விசாரித்து வருகிறார்கள்.