விவாகரத்து கேட்ட கணவனிடம் மனைவி வைத்த அழகான கோரிக்கை…! வீடியோ

கணவன் மனைவிக்கு இடையில் விரிசல் ஏற்பட்டு விவாகரத்து வரை செல்வதற்கு காரணம் அவர்களுக்குள் புரிதல் என்பது இல்லாமல் இருப்பதால் மட்டுமே.இந்தக் குறும்படத்தில், கணவன் இன்னொரு பெண்ணின் மீது ஆசைப்படுகிறார். அதனால், தனது மனைவியை விவாகரத்து செய்ய நினைத்து அதை மனைவியிடம் கூறுகிறார்.அதற்கு மனைவி கணவனிடம் ஒரு கோரிக்கை வைக்கிறார்.

அந்த கோரிக்கையானது, ஒரு மாத காலத்திற்கு தன்னை திருமணம் செய்த தருணத்தில் தன் மீது எப்படி பாசமாக இருந்தீர்களோ அதே போல் இருக்க வேண்டும் என்பதாகும். அதற்கு கணவனும் சம்மதம் தெரிவித்து ஒரு மாத காலத்திற்கு மிகுந்த அன்புடனும், அக்கறையுடன் மனைவியை கவனித்து வருகிறார்.

இதனால், கணவனின் மனம் மாறுகிறது, விவாகரத்து வேண்டாம் என்று நினைத்து மனைவியடம் மகிழ்ச்சியாக பேச வருகிறார்.ஆனால், அவர் மனைவியோ புற்றுநோய் பாதிக்கப்பட்டிருந்ததால் அவரை விட்டு பிரிந்துவிட்டார்.ஒருவரை புரிந்து கொள்ள வேண்டும் என்பது கட்டாயம் தான். ஆனால், அதற்கான காலாமும் முக்கியமல்லவா?

ஒருவர் பிரிந்து சென்ற பின், அவரை புரிந்து கொண்டு என்ன பயன்? உணருங்கள், தேவையற்று எவரையும் வெறுக்க கூடாது என்பதை எடுத்துக் காட்டும் அருமையான குறும்படம்.நீங்களும் பாருங்கள்.