பிரபல திரைப்பட நடிகர் பார்த்திபன்- நடிகை சீதாவின் மூத்த மகள் அபிநயாவின் திருமணம் கடந்த வாரம் நடைபெற்றது. இந்த திருமணத்திற்கு திரைப்பிரபலங்கள் பலரும் வந்திருந்தனர். அது தொடர்பான புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகின. இந்நிலையில் இந்த திருமணம் குறித்து சீதா பிரபல தமிழ் ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார். அதில் நடிகர் பார்த்திபனுக்கு நெகிழ்ச்சியுடன் நன்றி சொன்னார். ஏனெனில் கருத்துவேறுபாடு காரணமாக பார்த்திபன்-சீதா இருவரும் விவாகரத்து பெற்று தனித்தனியே வாழ்ந்து வருகின்றனர். இருப்பினும் இந்த திருமணத்தில் இருவரும் ஒரு தாய்-தந்தையாக சிறப்பாக செய்ய வேண்டிய அனைத்தையும் செய்து முடித்தனர்.
சீதா கூறுகையில், என் இரு மகள்களும் அப்பாவை மிஸ் செய்துவிடக்கூடாது, அவரும் மகள்களை மிஸ் செய்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தேன். எங்களுக்குள் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், எங்கள் மகள்களின் கல்யாணத்தில் ஒருமித்த அன்புடன் முன்னின்று எல்லா வேலைகளையும் செய்தோம். இருவரும் தனித்தனியே பாதப் பூஜைகளைச் செய்தோம். அதன் பின் கன்னிகாதானாம் நான் செய்வதை விட, அவர் செய்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தேன்.
இதைப் பற்றி அவரிடம் கூறிய போது மகிழ்ச்சியாக ஏற்றுக் கொண்டு இரு மகள்களுக்குமே கன்னிகாதானம் செய்துகொடுத்தார். பல்லக்கில் மகளைக் கூட்டிட்டு வரும் நிகழ்வையும் அவரே செய்தார். இதனால் அவருக்கும், எனக்கும், மகள்களுக்கும் மிகவும் சந்தோஷம். எங்களைப் பார்த்து, கல்யாணத்துக்கு வந்திருந்த விருந்தினர்களுக்கும் மகிழ்ச்சி. கருத்துவேறுபாடுகளை மறந்து பெற்றோரா இருவரும் எங்க கடமையை நிறைவேத்தியிருக்கிறோம். எனவே அவருக்கு நான் நன்றிக்கடன் பட்டிருக்கேன் என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
சீதாவின் இரண்டாவது மகள் கீர்த்தனாவுக்கு கடந்த ஆண்டு கல்யாணம் முடிந்தது, அப்போது நடிகர் பார்த்திபன் கலந்து கொண்டு ஒரு அப்பாவாக முன் நின்று திருமணத்தில் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கன்னிகாதானம் என்றால் திருமணம் செய்துவைக்கும்போது, தந்தையானவர் தான் பெற்ற பெண்ணை மற்றொரு குடும்பத்தில் பிறந்த ஆண்மகனுக்கு தானமாக அளித்து அவனிடம் ஒப்படைக்கும் இந்த நிகழ்வையே கன்யாதானம் அல்லது கன்னிகாதானம் என்று கூறப்படுகிறது.