விஷால் அனகோண்டா பாம்புனா? நீங்க அமேசான் காடுகள்..! குஷ்புவை டபுள் மீனிங்கில் கலாய்த்த ரசிகருக்கு ஏற்பட்ட பரிதாபம்!

சின்னத் தம்பி படத்தில் இருந்து பிரபலம் பல படங்கள் நடித்து தற்போது அரசியலிலும் கால் பதித்து தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார் நடிகை குஷ்பு. 5 படம் 10 படம் என வந்துவிட்டு காணாமல் போகும் ரசிகர்களுக்கு மத்தியில் கடந்த 25 வருடங்களாக தனக்கென முத்திரை பதித்து சினிமா, டிவி தொடர்களில் நடித்து வருபவர் குஷ்பு. தமிழ் ரசிகர்கள் கோவில் கட்டும் அளவிற்கு கொடி கட்டி பறந்தவர் குஷ்பூ.


சூப்பர் ஸ்டார், உலக நாயகன் என குஷ்பூ உடன் ஜோடி போட்டு நடிக்காத முன்னணி நாயகர்கள் இல்லை என்று சொல்லலாம். சன் டி.வி.யில் ஒளிபரப்பாகும் மகாலட்சுமி சீரியலில் பிசியாக நடித்து வரும் குஷ்பூ, இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது புகைப்படங்களை பதிவேற்றி வருகிறார். குஷ்பு விஷால் உடன் எடுத்துக் கொண்ட செல்ஃபி ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டார்.

அதைப் பார்த்த நெட்டிசன் ஒருவர் அனகோண்டாவும், அமேசானும் என கிண்டல் செய்து கமெண்ட் போட்டிருந்தார். அந்த பதிவை பார்த்து கோபம் அடைந்த குஷ்பூ, உங்க அம்மா என்ன பிளிப்கார்ட்டா என பதிலடி தந்துள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள் குஷ்பூவை பாராட்டியுள்ளனர். இருப்பினும் ஒருசிலர், கேவலமா பதிவை போட்டவனை மட்டும் திட்டாமல் ஏன் தாயை பற்றி ஏன் பேசவேண்டும் என கேட்டுள்ளனர்.

என் மகன் மைனர்! அவனை ஒன்றும் செய்ய முடியாது! பெண் டாக்டரை சிதைத்தவனின் தந்தை சொல்லும் பகீர் காரணம்! ஒரு பெண்ணாக, சமூகத்தில் முக்கிய அந்தஸ்தில் இருக்கும் நீங்கள் கேவலமான பதிவுகளுக்கு கேவலமான பதிவு போட்டால் உங்கள் மதிப்புதான் கெடும் என தெரிவித்துள்ளனர். சமூக வலைதளங்களில் வரம்பு மீறிய விமர்சனங்களால் அவ்வப்போது தேவையின்றி மன உளைச்சல் ஏற்படுகிறது. நாம் என்ன சொன்னாலும் கேட்டுக்கொள்வார்கள் என நினைக்கும் சிலர் இதுபோல் மூக்குடைந்து போகின்றனர்.