வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் விஷ்ணு விஷால். அதைத்தொடர்ந்து பல படங்களில் நடித்துத்திருந்தாலும் கடைசியாக இவரது நடிப்பில் வெளியான ராட்சசன் திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்று கொடுத்தது. இதற்கிடையில், இவர் கடந்த 2011ம் ஆண்டு தனது தோழி ரஜினியை திருமணம் கொண்டார். இவர்களுக்கு ஆர்யன் என்ற ஒரு மகன் இருக்கிறான். இதற்கிடையில் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், ஒரு வருடத்திற்குப் பிறகு விவாகரத்து கிடைத்துவிட்டதாக விஷ்ணு விஷால் கடந்த ஆண்டு இறுதியில் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார்.
இந்நிலையில், இவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பேட்மிண்டன் வீராங்கனை ஜூவாலா குட்டாவுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். இதை கண்ட நெட்டிசன்கள், இந்த புகைப்படத்திற்கு என்ன அர்த்தம்? நீங்கள் இவரைத் திருமணம் செய்துகொள்ளப் போகிறீர்களா? இதனால் தான் உங்கள் மனைவியை விவாகரத்து செய்து விட்டீர்களா? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.
🙂@Guttajwala pic.twitter.com/RvxqWoMPYB
— VISHNU VISHAL – VV (@TheVishnuVishal) June 3, 2019