வீட்டிற்குள் இருந்து துர்நாற்றம்! கிச்சனில் கணவன் சடலம்! அங்கேயே பத்து நாட்களாக சமைத்து சாப்பிட்ட மனைவி! பகீர் சம்பவம்!

மத்தியப்பிரதேசம் மாவட்டத்தில் அனுப்பூர் என்ற இடம் அமைந்துள்ளது. இதற்குட்பட்ட கரோண்டி என்ற மாவட்டத்தில் மகேஷ் பனவால் என்ற வழக்கறிஞர் வசித்து வந்துள்ளார். இவருடைய அண்ணனின் பெயர் அர்ஜுன் பனவால். இவருடைய மனைவியின் பெயர் பிரமிளா. பிரமிளாவின் வயது 35.

“நான் என்னுடைய குடும்பத்தினருடன் எப்பொழுதெல்லாம் சென்றோமோ, அப்போதெல்லாம் வீட்டிற்குள் நுழைய விடாமல் பிரமிளா தடுத்துவிட்டார். இதனால் தகுந்த விசாரணை நடத்த வேண்டும்” என்று கேட்டுக்கொண்டனர். அதன்படி காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.  விசாரணையில் பிரமிளா தன்னுடைய நண்பருடன் சேர்ந்து மகேஷை தீர்த்துக்கட்டியுள்ளார் பின் சடலத்தை விட்டு கிச்சனிலேயே புதைத்துள்ளனர்.

மகேஷ் கங்காராமின் மனைவியுடன் தொடர்பில் இருந்ததால் பிரமிளா ஆத்திரம் அடைந்ததாகவும், பின்னர்  கங்காராமுடன் இணைந்து கொண்டு இப்படி செய்ததாக ஒப்புக்கொண்டார்  ஆனால் கங்கா ராம் இந்த குற்றத்தை ஒப்புக்கொள்ளவில்லை. சம்பவம் நடைபெற்று சுமார் 10 நாட்கள் ஆன நிலையில் சடலத்தை கீழே வைத்து சமைத்து சாப்பிட்டு வந்துள்ளார் பிரமிளா. இந்த சம்பவமானது மத்திய பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.