வீட்டில் நடந்த சோகம் தெரியாமல் பிக்பாஸ் வீட்டில் வாழும் ஜனனி… ஜனனியின் தங்கை கூறியது என்ன தெரியுமா?

பிக்பாஸ் நிகழ்ச்சி சூடு பிடிக்கவில்லை என்ற வருத்தம் ரசிகர்களிடம் இருந்தது. ஆனால் இப்போது பார்த்தால் போட்டியாளர்களிடையே சண்டை சூடு பிடிக்க எரிமலையாக வெடித்துவிடும் போல் தெரிகிறது.தற்போது உள்ள பிக்பாஸ் போட்டியாளர்களில் ரசிகர்கள் மனம் கவர்ந்தவர் நடிகை ஜனனி, இவருக்கு  பிக்பாஸ் வீட்டில் நுழைவதற்கு முன்பே பல ரசிகர்கள் உண்டு. பிக்பாஸ் வீட்டிற்க்குள் போன பிறகு ஒரு ரசிகர் பட்டாளமே சேர்ந்துள்ளது.

இந்நிலையில் ஜனனி ஐயரின் சகோதரியான கார்த்திகா அவரை பற்றி சில விடயங்களை கூறியுள்ளார். அதில் அவர் அப்பாவிற்கு மிகவும் செல்லமான பிள்ளை. அவளை வீட்டில் அச்சு என்று தான் அழைப்போம் என்றார்.அக்கா வீட்டில் நடந்துக்கொள்வது போல் தான் அங்கும் நடந்துக்கொள்கிறார். பின் ஜனனிக்கு காரில் நீண்ட தூரம் பயணம் செய்வது மிகவும் பிடித்தது என்றார்.

மேலும் ஜனனி நெய் இல்லாமல் சாப்பிடவே மாட்டார். அங்கு அவள் நெய் இல்லாமல் மிகவும் கஷ்டப்படுகிறார்.மேலும் ஒரு சோகமான விடயம் ஜனனியின் தாய் மாமா இறந்துவிட்டாராம்.

இது இன்று வரை ஜனனிக்கு தெரியாது தெரிந்தால் அவள் அங்கு இருக்கமாட்டார் என்றும் கார்த்திகா கூறியுள்ளார்.வீட்டில் நடந்த சோகம் தெரியாமல் சந்தோஷமாக ஜனனி அங்கு இருந்து வருகிறார்.