வீட்டில் மகனுடன் விளையாடிக் கொண்டிருக்கும் நடிகர் பிரகாஷ் ராஜ்! இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா.? ரசிக்க வைத்த வீடியோ..!

50க்கும் மேற்பட்ட தமிழ் படங்களில் வில்லன் கதாபாத்திரத்திலும்,குணசித்திர நடிகராகவும் நடித்தவர் தான் பிரகாஷ் ராஜ். இந்தியாவின் 2 தேசிய விருது பெற்ற திரைப்பட நடிகர் ஆவார். இவர் கன்னடம், தமிழ், மலையாளம், மற்றும் தெலுங்கு மொழித் திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் தனது காஞ்சிவரம் தமிழ் திரைப்படத்துக்காக 2007 ஆம் ஆண்டுக்கான சிறந்த நடிகருக்கான தேசிய திரைப்பட விருதை பெற்றுள்ளார்.

அத்துடன் இவர் இருவர் தமிழ்த் திரைப்படத்துக்காக 1998 ஆம் ஆண்டுக்கான சிறந்த துணை நடிகர் விருதையும் பெற்றிருக்கிறார். கொரோனா தானாக பரவவில்லை பரப்புகிறார்கள் என நடிகர் பிரகாஷ் ராஜ் வேதனை தெரிவித்துள்ளார்.இதுகுறித்து நடிகர் பிரகாஷ் ராஜ் அவரின் டிவிட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது,கொரோனா வைரஸ் தானாக பரவவில்லை.

பொதுமக்கள்தான் பரப்புகிறார்கள். அனைவரும் வீட்டிலேயே இருந்து உங்களை சுற்றி இருப்பவர்களுக்கு உதவுங்கள். பொறுப்போடு செயல்படுங்கள். அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு தாருங்கள். என் மகனுடன் நேரத்தை கழிக்கிறேன். குழந்தைகள் எதிர்காலம் யோசிக்கிறேன் என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார்.