தமிழகத்தில் வட சென்னை பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் சொற்ப வாக்குகள் வாங்கி டெபாசிட் இழந்துள்ளார்.
கண்ணா லட்டு தின்ன ஆசையா உள்ளிட்ட சில படங்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானவர் சீனிவாசன். இவருக்கு பவர்ஸ்டார் என்கிற பட்டமும் கொடுக்கப்பட்டது.
ஆனால், பலரிடம் பணம் வாங்கி மோசடி செய்ததாக பல புகார்கள் எழுந்தது. சில மாதங்கள் சிறையிலும் இருந்தார். தற்போது சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிட்டார்.
அரசியலில் இறங்க ஆசைப்பட்ட அவர் வட சென்னை பகுதியில் மக்களவை தேர்தல் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டார்.
அந்த தொகுதியில்தான் திமுக சார்பில் தமிழச்சி தங்க பாண்டியனும், அதிமுக சார்பில் அமைச்சர் ஜெயக்குமாரின் மகன் ஜெயவர்தனும் போட்டியிட்டனர்.
இன்று காலை வாக்குகள் எண்ணப்பட்ட போது, வாக்கு பூத்துக்கு சீனிவாசன் வந்தார்.
தொடக்கம் முதல் சொற்ப வாக்குகள் மட்டுமே பெற்றிருந்த அவர் இறுதியில் 670 வாக்குகள் மட்டுமே பெற்றதாக அறிவிக்கப்பட, அங்கிருந்து தெறித்து ஓடியுள்ளார்.