வெளிநாட்டிற்கு சென்ற பிரபல தொகுப்பாளினியுடன் நெருக்கமாக இருக்கும் இளைஞர் யார்? சர்ச்சைக்குரிய புகைப்படம் உள்ளே

தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தனித்த அடையாளம் அடையாளம் இருக்கும். அப்படி ZEEதமிழ் டிவியில் சினிமா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதில் புதிய பாணியை புகுத்தி பார்வையாளர்களை கவர்ந்ததில் அர்ச்சனாவிற்கு ஒரு தனி இடம் உண்டு.பொதிகை தொலைக்காட்சியில் தொடங்கி ZEEதமிழ் தொலைக்காட்சி வரை சின்னத்திரை உலகில் நீண்ட பயணம் அர்ச்சனா உடையது. சீரியல், சினிமா என அனைத்து துறைகளிலும் தடம் பதித்து வென்றுள்ளார்

இந்நிலையில் அர்ச்சனா இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார்.வல்வெட்டித்துறை கடற்கரை, நல்லூர் முருகன் கோவில் என ஈழத்தில் உள்ள பல இடங்களுக்கு சென்று புகைப்படங்களை எடுத்துள்ளார்.ஒரு நிகழ்ச்சிக்காக தொகுப்பாளினி அர்ச்சனா இலங்கை சென்றுள்ளதாகவும், நிகழ்ச்சி முடிந்தவுடன் அவரின் குழுவினருடன் சுற்றுலா சென்றுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டகிராம் பக்கத்திலும் பதிவு செய்துள்ளார். இதில், இளைஞர் ஒருவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார்.

இதேவேளை, குறித்த புகைப்படத்தில் இருப்பவர், அவரின் நெருங்கிய தோழர் என குறிப்பிடப்பட்டுள்ளது. அண்மை காலமாக பிரபலங்கள் நிறைய பேர் இலங்கைக்கு செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.