வெளிநாட்டிலிருந்து கதறி அழுத கலா மாஸ்டர். அனைவரையும் கண்கலங்க வைத்த காட்சி

கலைஞரின் மறைவு என்பது ஒரு சகாப்தத்தின் முடிவு. இந்தியாவுக்கும் தமிழ் இன மக்களுக்கும் ஒரு பேரிழப்பு. கலைஞர் இந்தியாவின் மிக மூத்த அரசியல் தலைவர், 50 ஆண்டுகளாக ஒரு கட்சியின் தலைவர், 5 முறை முதலமைச்சர் –இவை வரலாற்றுச் சாதனை.கருணாநிதியின் மறைவையொட்டி பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர்

இந்நிலையில் பிரபல நடன இயக்குனர், தயாரிப்பாளர், என பன்முக திறமை கொண்ட காலா மாஸ்டர் திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியின் மறைவுச் செய்தியைக் கேட்ட கதறியழுத காட்சி தற்போது வெளியாகியுள்ளது. காவேரி மருத்துவமனையில் கடந்த செவ்வாய்கிழமை மாலை உயிரிழந்தார்.

கருணாநிதியின் உடலை சென்னை மெரினாவில் அண்ணா நினைவிடம் அருகே புதன் கிழமை அரசு மரியாதையுடன் அடக்கம் செய்தனர்.இவரது மறைவினை நினைத்து ஒட்டுமொத்த மக்களும், அரசியல் தலைவர்களும், குடும்பத்தினருடன் துயரத்தில் காணப்படுகின்றனர்.

இந்நிலையில் கலாமாஸ்டர் கனடாவில் இருந்து கலைஞரைக் கடைசியாக காணமுடியவில்லையே தனது ஆதங்கத்தை கண்ணீராக காணொளியில் வெளியிட்டுள்ளார்.வைரலாகும் அந்த வீடியோ பதிவ இதோ