
பிரபல டிவியில் ஒளிபரப்பான ரியாலிட்டி ஷோவான சூப்பர் சிங்கர் சீசன் 6 போட்டியில் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளுக்கிடை இந்த சீசனில் மக்கள் இசைக்கலைஞரான செந்தில் கணேஷ் முதலிடம் பிடித்தது ஒட்டுமொத்த மக்களிசைக் கலைஞர்களுக்கும் கிடைத்த அங்கீகாரமாக கொண்டாடுகின்றனர். இந்த வெற்றிக்கு பின்பு அடுத்தடுத்து பல வாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருந்து வருகிறது.
அந்த வகையில் சீசன் 6ல் வெற்றிபெறுபவர் ஏ.ஆர்.ரகுமானின் இசையில் பாடுவார் என உறுதியளிக்கப்பட்டது.இதனையடுத்து வெற்றிபெற்ற செந்தில்கணேஷ் ஏ.ஆர்.ரகுமானுடன் எந்த படத்தில் பாடப் போகிறார் என்று எதிர்பார்ப்புடன் இருக்கும்போது, இசையமைப்பாளர் டி.இமானிடம் இருந்து அதிரடி அறிவிப்பு வந்தது.
இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் சிவக்கார்த்திகேயன் சமந்தா நடிக்கும் சீமராஜா திரைப்படத்தில் தனது முதல்பாடலை சிவகார்த்திகேயனுக்குப் பாடினார்.இப்படி பல வாய்ப்புகள் தேடி வந்து குவியும் நிலையில்
தற்போது செந்தில் கணேஷ் தனது மனைவி ராஜலட்சுமி மற்றும் குழுவினருடன் வெளிநாட்டிற்குச் சென்றுள்ளார். அவர்கள் நேற்று வெளியிட்டுள்ள காணொளி பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.வைரலாகும் வீடியோ இதோ