வெளிநாட்டில் செல்பி எடுக்கும்போது உயிரிழந்த இளம் தம்பதி..! மது அருந்தித்யத்தால் நிகழ்ந்த விபரீதம் அடுத்தடுத்து வெளியான திடுக்கிடும் தகவல்.

அமெரிக்காவில் சுற்றுலாதளத்தில் செல்பி எடுத்த போது கீழே விழுந்து உயிரிழந்த கேரள தம்பதி மது அருந்தியிருந்தது பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது. கேரளாவை சேர்ந்தவர் விஷ்ணு விஸ்வநாத் (29). இவர் மனைவி மீனாட்சி மூர்த்தி. இளம் தம்பதிகளான இவர்கள் அமெரிக்காவின் கலிபோர்னியாவுக்கு சென்றிருந்தார்கள் இந்நிலையில் கடந்தாண்டு அக்டோபர் மாதத்தில் Yosemite Valley என்னும் சுற்றுலா பகுதிக்கு இருவரும் சென்ற நிலையில் 3500 அடி உயரத்தில் உள்ள இடத்தில் நின்று கொண்டு செல்பி எடுத்தார்கள் அப்போது விஷ்ணுவும், மீனாட்சியும் கீழே விழுந்த நிலையில் இருவருக்கும் தலை, மார்பு மற்றும் வயிற்று பகுதியில் பலத்த காயங்கள் ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்நிலையில் தடய நோயியல் நிபுணர் வெளியிட்ட அறிக்கையில் இருவர் உடலிலும் போதை வஸ்துகள் இல்லை என தெரிவித்திருந்தார். ஆனால் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு பிரேத பரிசோதனையில் இருவரும் மது அருந்திருந்தது தெரியவந்துள்ளது. ஆனால் எந்தளவுக்கு அவர்கள் மது அருந்தியிருந்தார்கள் என்ற தகவல் வெளியாகவில்லை.