வெளிநாட்டில் வேலை செய்த கணவன்: உள்ளூரில் வசித்து வந்த இளம் மனைவிக்கு நேர்ந்த பயங்கரம்

இந்தியாவில் இளம்பெண்ணை அவரது மாமியார் விஷம் வைத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் சுப்ரமணியம். இவருக்கும் ரமலும்மா (25) என்ற பெண்ணுக்கும் சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்த நிலையில் தம்பதிக்கு ஒரு குழந்தை உள்ளது. இந்நிலையில் சுப்ரமணியம் சில மாதத்துக்கு முன்னர் வெளிநாட்டுக்கு வேலைக்கு சென்றார். இதையடுத்து மாமியார் மற்றும் அவர் வீட்டாருடன் ரமலும்மா வசித்து வந்தார். ரமலும்மாவுக்கும் அவர் மாமியாருக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் சில நாட்களாக ரமலும்மா வயிற்று வலியால் துடித்து வந்தார். இதையடுத்து ரமலும்மாவின் சகோதரர் அவரை மருத்துவமனையில் சேர்த்தார்.

அங்கு சிகிச்சை பலனின்றி ரமலும்மா உயிரிழந்தார். அவருக்கு விஷம் கொடுக்கப்பட்டது பிரேத பரிசோதனையில் தெரியவந்தது. இதையடுத்து ரமலும்மாவின் சகோதரர், பொலிசில் ரமலும்மாவின் மாமியார் மீது புகார் கொடுத்தார். பொலிசார் நடத்திய விசாரணையில் ரமலும்மாவின் சடலத்தை யாருக்கும் தெரியாமல் அவர் மாமியார் புதைக்க நினைத்தது தெரிந்தது. இதையடுத்து ரமலும்மாவை அவர் மாமியார் தான் கொலை செய்தார் என்ற கோணத்தில் பொலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.