வெளியே லீக் ஆன எண்டோமாலின் ரகசியம்…. பிக்பாஸின் வெற்றியாளர் ரித்விகா இல்லையா?

100 நாட்களை கொண்ட பிக்பாஸ் போட்டி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. 100 நாட்கள் நிறைவடைய இன்னும் 6 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், யார் வெற்றியாளர் என்பதை அறிந்து கொள்ள மக்கள் ஆர்வமாக உள்ளனர். இந்நிகழ்ச்சி மக்கள் மத்தியும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.ஐஸ்வர்யா, ரித்விகா இருவருக்கும் சரியான போட்டி நிலவி வரும் நிலையில் ரித்விகா அதிக வாக்குகள் பெற்று நேற்றைய தினத்தில் முன்னிலையில் இருந்து வந்தார்.ஆனால் இன்று வாக்கு நிலவரம் என்ன என்பது தெரியாத நிலையில் உள்ளது.காரணம் பிரபல ரிவி வாக்குநிலவரத்தை வெளியிடாமல் வைத்துள்ளது.

ஆனாலும் ஐஸ்வர்யாவிற்கு இருமடங்காக வாக்கு பெற்றிருக்கும் ரித்விகா இன்று ஒரு நாளில் அந்த இடத்திலிருந்து எப்படி கீழ் இறங்கிவிடுவார் என்ற எண்ணம் மக்கள் மனதில் உள்ளது. மேலும் பிக்பாஸ் ஐஸ்வர்யாவினை தான் வெற்றி பெற வைக்குமா என்ற கேள்வி எழுந்து வரும் இத்தருணத்தில் மற்றொரு தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. பிரபல பிக்பாஸ் நிகழ்ச்சியினை நடத்திவரும் எண்டோமால் நிறுவனத்திற்கும், பிக்பாஸிற்கு அதிகமாக பெயர் வாங்கிக் கொடுத்த ஐஸ்வர்யாவினை 13 வயதிலிருந்து பார்த்துக் கொண்டிருக்கிறாராம்.

அதுமட்டுமின்றி எண்டோமால் நிகழ்ந்தி இரண்டு, மூன்று நிகழ்ச்சிகளில் ஐஸ்வர்யா சிறப்பு விருந்தினராகவும் அழைக்கப்பட்டுள்ளாராம்.மேலும் இது குறித்து பிக்பாஸ் சீசன் 1-ல் எண்டோமால் நிறுவனத்தால் ரன்னராக வந்த சினேகன் கூறுகையில், ரித்விகா வெற்றி பெற்றால் மக்களின் எண்ணம் நிறைவேறியதாகவும், ஐஸ்வர்யா வெற்றி பெற்றால் எண்டோமால் நினைத்ததை நிறைவேற்றிவிட்டனர் என்று நினைத்துக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் கமல்ஹாசன் பற்றி கூறுகையில், பிக்பாஸ் அவர்களுக்கு கொடுத்த சட்ட திட்டங்களுக்கு கீழே அவர் செயல்படுகிறார் என்றும் ஆனால் தன்னால் முடிந்தவரை உணமைக்காக போராடுகிறார் என்றும் சினேகன் கூறியுள்ளார்.