தமிழ் சினிமாவில் இந்த வருட ஆரம்பத்தில் இருந்து நல்ல விஷயங்களாக நடந்து வருகிறது. முதல் மாத படங்களே செம ஹிட், அதோடு பிரபலங்களின் திருமணங்களும் நடந்து வருகிறது. அப்படி படு பிரம்மாண்டமாக நடந்தது ரஜினியின் இரண்டாவது மகள் சௌந்தர்யாவின் மறுமணம். விசாகன் என்ற தொழிலதிபரை தான் அவர் மறுமணம் செய்துள்ளார். திருமணம் முடிந்து இரண்டு மாதங்கள் ஆன நிலையில் தங்களது புதிய வாழ்க்கை குறித்து பிரபல தமிழ் ஊடகம் ஒன்றிற்கு பேட்டி கொடுத்துள்ளனர்.
அதில் செளந்தர்யா தன்னுடைய திருமணம் போயஸில் நடைபெற வேண்டும் என்று ஆசைபட்டதாகவும், ஆனால் அங்கு பாதுகாப்பு போன்ற காரணங்களால் மாற்றப்பட்டதாகவும் கூறியுள்ளார். மேலும் அவர் மகன் மகன் வேத்வை விசாகனுக்கு மிகவும் பிடித்து போய்விட்டதால், இருவருமே நன்றாக பழக ஆரம்பித்தனர். குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால்
இந்த திருமணத்திற்காக வேத்துவிடம் கூட, விசாகன் நான் அம்மாவை திருமணம் செய்து கொள்ளலாமா என்று கேட்டாராம், அதற்கு அவர் ஆம் என்று கூறியதாகவும், அந்த வீடியோ கூட இருப்பதாக செளந்தர்யா கூறியுள்ளார்.
அதுமட்டுமின்றி திருமண நேரத்தில் வேத் அப்போது இல்லை, உடனே விசாகன் வேத் வரும் வரை காத்திருக்கலாம் என்று தாலி கட்டாமல் விசாகன் காத்திருந்ததாகவும் நெகிழ்ச்சியாக கூறியுள்ளார்.