வைரமுத்து விவகாரத்தில் -“என்னை விட்டு விடுங்கள்” செய்தியாளர்களிடம் கெஞ்சிய சின்மயி!

செய்தியாளர் சந்திப்பின் போது பாலியல் பலாத்கார குற்றச்சாட்டு என நிரூபர் கூறியதற்கு சின்மயி கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.கவிஞர் வைரமுத்து தன்னை படுக்கைக்கு அழைத்தார் என சின்மயி கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் சின்மயி, லஷ்மி ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். திரைத்துறையில் பாலியல் தொல்லை இருக்கிறது. பிரச்னையை உடனே வெளிப்படுத்தாமல் மூடி மறைத்ததே அதற்கு காரணம். இதைப்பற்றி யாரும் வெளிப்படையாக பேசவில்லை.பயத்தினாலயோ, இமேஜுக்காகவோ அதனை அவர்கள் மூடி மறைக்கிறார்கள்.

நம் சமூகத்தின் பார்வையே தவறாக உள்ளது. பாதிக்கப்படுவர்கள் ஏன் வெட்கப்பட வேண்டும்? குற்றவாளிகள் தான் வெட்கப்பட வேண்டும்? என கூறினார் அப்போது செய்தியாளர் ஒருவர், சீனியர் நடிகைகள் யாரும் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக புகார் சொல்லாத போது நீங்கள் மட்டும் ஏன் சொல்கிறீர்கள் என கேள்வி எழுப்பினார்.அதற்கு பதிலளித்த சின்மயி.

அது பலாத்காரம் இல்லை, பலாத்காரத்துக்கும், பாலியல் துன்புறுத்தலுக்கும் உங்களுக்கு வித்தியாசமே தெரியவில்லை என கத்தினார்.உடனே அருகில் இருந்த நடிகை இது பாலியல் துன்புறுத்தல் என கூறினார்.

இதையடுத்து சீனியர் நடிகை புகார் கொடுக்காதது குறித்து அவர்களிடம் தான் கேட்க வேண்டும் என நடிகை லஷ்மி ராமகிருஷ்ணன் கூறினார்.மேலும் அவர் பேசிய முழு வீடியோ இதோ