இளைஞர்களின் கனவுக்கன்னியாக திகைத்து வருவார் நடிகை சன்னி லியோன். இந்திய வம்சாவளியான இவர் குடும்பம் கனடா நாட்டில் வசித்து வந்தனர் பின்பு அங்கிருந்து இந்தியா வந்து, சில இந்தி படங்களில் நடித்தார். இதன் பிறகு பல இந்திய மொழிகளிலும் அவர் நடித்துள்ளார். ‘வீரமாதேவி’ என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாக இருக்கிறார் பிரபல கவர்ச்சி நடிகை சன்னி லியோன். இதனைத் தொடர்ந்து மலையாளத்திலும் ‘ரங்கீலா’ எனும் படத்தின் மூலம் அறிமுகமாக இருக்கிறார்.
கவர்ச்சி நடிகை சன்னி லியோன் தற்போது மோசமான காட்சிகள் நடிப்பதில்லை. நல்ல படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். இவர் நிஷா என்ற பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். மேலும் இரண்டு குழந்தைகளை தத்து எடுத்து வளர்த்து வருகிறார். சமீபத்தில் இவர், “நான் செய்யும் விஷயங்கள் சமூகத்திற்கு எதிராக தான் இருக்கும் என்று தெரிவித்திருந்தார்”. அது மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது.
இவர் தற்போது, காமெடி தொடரில் நடிக்க இருப்பதாகவும் அதனால் அவர் உற்சாகமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். எனக்கு காமெடி என்றால் மிகவும் பிடிக்கும் முகத்தில் எப்போதும் சிரிப்புடன் இருப்பது நல்ல விஷயம் தான் அதை நான் அதிகம் விரும்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
சன்னிலியோன் சமூகவலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்க கூடியவர். இன்ஸ்டாகிராமில் மட்டும் அவருக்கு 25 மில்லியன் ஃபாலேவார்ஸ் உள்ளனர். இந்நிலையில்,ஊரடங்கால் வீட்டில் முடங்கி கிடக்கும் ரசிகர்களை குஷிப்படுத்த தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய பழைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.