கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்திய பில்லியனர்களில் ஒருவரான பேடிஎம் உரிமையாளர் ராஜசேகர் கொடுத்த நிதியுதவியைக் கண்டு இணையவாசிகள் பலரும் விமர்சித்து வருகின்றனர்.கேரளாவில் கடந்த ஒரு மாதகாலமாக பெய்து வரும் கனமழையால், அம்மாநிலமே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியுள்ளது.இதனால் அம்மாநில மக்களுக்கு பலரும் உதவி செய்து வருகின்றனர். திரைப்பிரபலங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், சிறுவர், சிறுமியர் போன்றோர் கூட தங்களால் இயன்ற உதவியை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்திய பில்லியனர்களில் ஒருவரானவரும், PAYTM நிறுவனருமான ராஜசேகர் கேரளாவில் வெள்ளத்தில் சிக்கித்தவிக்கும் மக்களுக்கு பத்தயிராம் ரூபாயை நிதியுதவியாக அளித்துள்ளார்.இதை அவர் தான் 10 ஆயிரம் ரூபாய் நிதியுதவி அளித்துள்ளதாகவும் அதேபோல் நிதியுதவி அளிக்கவிரும்புவோர் PAYTM பயன்படுத்தி நிதியுதவி அளிக்கலாம் என மொபைல் ஸ்க்ரீன் ஷாட் ஒன்றை தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றம் செய்தார்.
இதைக் கண்ட இணையவாசிகள் தங்களால் முடியாமல் போன கூட எப்படியாவது பலர் உதவி செய்ய வேண்டும் என்று ஏதாவது ஒரு வழியை தேடி வருகின்றனர். அதுமட்டுமின்றி சேர்த்து வைத்திருந்த பணம், அறுவை சிகிச்சைக்கு வைத்திருந்த பணம் என அவசரத்திற்கு வைத்திருந்த பணத்தை அப்படியே கொடுக்கின்றனர்.
ஆனால் 11,865 கோடி சொத்துக்கு சொந்தக்காரரான இவரின் செயல் ஒரு மலிவான விளம்பரம், அவருடைய சொத்து மதிப்பிற்கு இது அற்பத்தொகை என விமர்சித்து வருகின்றனர்.இதைக் கண்ட ராஜசேகர் தான் பதிவிட்டிருந்ததை நீக்கிய போதும், அதை ஸ்கீரின் ஷாட் எடுத்து சமூகவலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர்.