189 பேருடன் கடலில் விழுந்த விமானம் இதுதான்… தீயாய் பரவும் காணொளியால் குழப்பத்தில் மக்கள்

இந்தோனேஷியாவில் 189 நபருடன் புறப்பட்ட விமானம் கடலில் விழுந்து நொறுங்கியதில் அனைவரும் உயிரிழந்துவிட்டனர் என்று கூறிவரும் நிலையில் தற்போது குறித்த விமானம் கடலில் இருக்கும் காட்சி தற்போது வெளியாகியுள்ளது. இந்தோனசியாவின் ஜகர்தாவில் இருந்து சுமத்ரா தீவு அருகில் இருக்கும் பங்கல் பினாங் நகரத்திற்கு கடந்த திங்களன்று காலை புறப்பட்டுச் சென்ற விமானம் திடீரென மாயமானது.விமானம் புறப்பட்ட 13-வது நிமிடத்தில் அதன் கட்டுப்பாட்டினை இழந்து கடலுக்குள் விழுந்து நொறுங்கியதாக கூறப்பட்ட நிலையில்.

அவ்விமானத்தில் பயணித்த அனைவரும் உயிரிழந்துவிட்டனர் என்றும் அறிவிக்கப்பட்டது.கடலில் விழுந்த விமானத்தை மீட்டு வருகின்றனர் என்றும் இதுதான் உண்மையான காட்சி என்றும் முகநூலில் காணொளி ஒன்று வெளியாகி மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.