2 ஆண்டுகள் கழித்து காதலியை ஆசையாக காண ராணுவத்திலிருந்து வந்த நபர்: காத்திருந்த பேரதிர்ச்சி

ராணுவ வீரர் ஒருவர் இரண்டாண்டுகளுக்கு பின்னர் ராணுவத்தில் இருந்து தனது காதலியை பார்க்க வந்த நிலையில் காதலிக்கு வேறு நபருடன் திருமணம் ஆனது தெரிந்து அதிர்ச்சியில் உறைந்துள்ளார். நைஜீரியாவை சேர்ந்தவர் எம்மி பெனிசன். ராணுவ வீரரான இவர் இளம்பெண் ஒருவரை கடந்த நான்கு ஆண்டுகளாக உயிருக்கு உயிராக காதலித்து வந்தார். இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக ராணுவ பணி தொடர்பாக காதலியை விட்டு பிரிந்து வேறு ஊரில் வசித்து வந்தார் பெனிசன். இதையடுத்து சமீபத்தில் காதலியை பார்ப்பதற்காக பெனிசன் வந்த நிலையில் அவருக்கு வேறு நபருடன் திருமணமானதாக தகவல் கிடைத்துள்ளது. இது சம்மந்தமான புகைப்படங்களை பெனிசன் சமூகவலைதளங்களில் பார்த்த நிலையில் அதிர்ச்சியில் உறைந்து போனார்.

இது குறித்து அவர் சமூகவலைதளங்களில் கண்ணீருடன் வெளியிட்ட பதிவில், நான்கு ஆண்டுகளாக நாங்கள் காதலித்து வந்தோம். ஆனால் எனக்கு இப்படி ஒரு துரோகத்தை அவள் செய்துவிட்டாள். இதையறிந்து நான் கதறி அழுதேன், ஆனால் எனக்காக நான் வாழ்வேன், என் மனம் உடைந்து போகாது என பதிவிட்டுள்ளார்.ராணுவ வீரர் ஒருவர் இரண்டாண்டுகளுக்கு பின்னர் ராணுவத்தில் இருந்து தனது காதலியை பார்க்க வந்த நிலையில் காதலிக்கு வேறு நபருடன் திருமணம் ஆனது தெரிந்து அதிர்ச்சியில் உறைந்துள்ளார். நைஜீரியாவை சேர்ந்தவர் எம்மி பெனிசன். ராணுவ வீரரான இவர் இளம்பெண் ஒருவரை கடந்த நான்கு ஆண்டுகளாக உயிருக்கு உயிராக காதலித்து வந்தார்.

இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக ராணுவ பணி தொடர்பாக காதலியை விட்டு பிரிந்து வேறு ஊரில் வசித்து வந்தார் பெனிசன். இதையடுத்து சமீபத்தில் காதலியை பார்ப்பதற்காக பெனிசன் வந்த நிலையில் அவருக்கு வேறு நபருடன் திருமணமானதாக தகவல் கிடைத்துள்ளது. இது சம்மந்தமான புகைப்படங்களை பெனிசன் சமூகவலைதளங்களில் பார்த்த நிலையில் அதிர்ச்சியில் உறைந்து போனார்.

இது குறித்து அவர் சமூகவலைதளங்களில் கண்ணீருடன் வெளியிட்ட பதிவில், நான்கு ஆண்டுகளாக நாங்கள் காதலித்து வந்தோம். ஆனால் எனக்கு இப்படி ஒரு துரோகத்தை அவள் செய்துவிட்டாள்.  இதையறிந்து நான் கதறி அழுதேன், ஆனால் எனக்காக நான் வாழ்வேன், என் மனம் உடைந்து போகாது என பதிவிட்டுள்ளார்.