சினிமா துறையில் இருப்பவர்களின் படங்கள் பற்றிய செய்தி அதிகம் பேசப்படுகிறதோ இல்லையோ அவர்களின் சொந்த வாழ்க்கை பற்றிய சின்ன செய்தி கூட காட்டுத்தீ போல ரசிகர்கள் மத்தியில் பரவுகின்றன.
தெலுங்கு, தமிழ் மொழிகளில் அதிகம் பிரபலமான பாடகி சுனிதா.இவர் தமிழில் மட்டும் தூது வருமா, தூவானம்,யாக்கி திரி என 100 க்கும் ,மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.இந்நிலையில் இவர் விரைவில் ஒரு ஐடி என்ஜினீயரை இரண்டாவது திருமணம் செய்து கொள்ளவுள்ளதாக சமீபத்தில் செய்தி பரவியது.
இதற்கு பதில் அளித்துள்ள அவர் “பர்சனல் லைப் பற்றி ஏன் இவ்வளவு ஆர்வமாக இருக்கிறீர்கள்” என முகநூலில் பதிவிட்டார். அந்த பதிவில் அவர் திருமணம் பற்றி மறுப்பு எதுவும் தெரிவிக்கவில்லை என்பதால் திருமணம் உறுதி என்பது பல மீடியாக்களில் செய்தி வெளியானது.
இதை பார்த்து அதிர்ச்சியான அவர் சிலர் மணி நேரங்களுக்கு முன்பு பேஸ்புக் லைவ்வில் வந்து “எனக்கு திருமணம் செய்யும் ஐடியா இல்லை” என கூறியுள்ளார்.
முதல் திருமணத்தில் இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களுக்கே தற்போது திருமண வயது வந்துவிட்ட நிலையில் தற்போது இப்படி ஒரு வதந்தியா என சினிமா துறையில் உள்ளவர்கள் ஷாக் ஆகிவருகின்றனர்.