சென்னை (11 மார்ச் 2019): பொள்ளாச்சியில் 200 க்கும் மேற்பட்ட பெண்களை ஆபாச படம் எடுத்து மிரட்டிய கும்பலுக்கும் அதிமுகவுக்கும் தொடர்பு இருப்பதால் இவ்விவகாரம் மூடி மறைக்கப் படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.பொள்ளாச்சியில் திருநாவுக்கரசு என்பவன் தலைமையில் ஃபேஸ்புக், வாட்ஸ்அப் மூலம் 200-க்கும் மேற்பட்ட இளம் பெண்களிடம் ஆசை வார்த்தைகளைக் கூறி, அவர்களை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ பதிவு செய்து மிரட்டி பணம் பறிக்கும் வேளையில் ஈடுபட்டு வந்துள்ளது.இந்த கும்பலிடம் இருந்து தப்பித்த கல்லூரி மாணவி ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரித்த போலீசார் இந்த வழக்கில் தொடர்புடைய சபரி ராஜன், சதீஷ், வசந்த் குமார் ஆகியோரை போலீசார் கைது செய்து முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசு என்பவரை தேடி வந்தனர்.
இதற்கிடையில், இந்த விவகாரத்தில் பல முக்கிய ஆளுங்கட்சி பிரமுகர்களுக்கு தொடர்பு இருப்பதாகவும், ஆஜராக உள்ளதாகவும் திருநாவுக்கரசு வீடியோ வெளியிட்டு இருந்தான். பிறகு அவனை போலீசார் கைது செய்ததாக கூறப்படுகிறது.இந்நிலையில் இவ்விவகாரம் நிர்மலா தேவி சம்பவம் போன்று மூடி மறைக்கப் படுவதாகவும் 200க்கும் மேற்பட்ட மாணவிகளிடம் விளையாடிய கும்பலும் அதன் பின்னணியில் உள்ளவர்களும் உரிய முறையில் தண்டிக்கப்பட வேண்டும் என்ற குரல் சமூக வலைதளங்களில் எழுந்துள்ளது.