சதா நடிப்பில் உருவாகியுள்ள டார்ச்லைட் படத்தின் டீசர் சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று வெளியாகி இணையத்தில் படு சூட்டை கிளப்பியுள்ளது.தமிழில் பட வாய்ப்பு இல்லாமல் சினிமாவை விட்டு விலகி இருந்தார் நடிகை சதா.இந்நிலையில், தற்போது மஜீத் இயக்கத்தில் உருவாகியுள்ள டார்ச்லைட் படத்தில் சதா பாலியல் தொழிலாளியாக நடித்துள்ளார்.
இவருடன் இணைந்து பிக்பாஸ் புகழ் ரித்விகாவும் நடித்துள்ளார்.இந்த நிலையில், இப்படத்தின் டிரைலர் இன்று வெளியாகியுள்ளது.மெட்ராஸ் படத்தில் குடும்ப பாங்கான நடிப்பை வெளிப்படுத்திய நடிகை ரித்விகா, இப்படத்தில் விபச்சாரியாக நடித்துள்ளார். மேலும் அவரின் வசனங்கள் அனைத்தும் வேற லெவலில் இருக்கின்றன.
அதாவது, கொடுக்குற ரூ.200க்கு உனக்கு சூடு ஏத்தி, மூடு ஏத்துவாங்களாக்கும், புரோக்கர் நீங்க சுகமாக வாழ்வதற்காக நாங்க சூடு வாங்கணுமா? என்ற வசனம் ரித்விகாவின் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது என்றே கூறலாம்.
மேலும், வயித்துப் பசிக்கு போக்குவது நல்லது என்றால், உடல் பசி தீர்ப்பதும் சேவை தான். குப்பையில் முளைத்தாலும், கறியை விட காளானுக்கு தான் சுவை அதிகம் போன்ற வசனங்கள் இப்படத்தில் இடம் பெற்றுள்ளது.