பிரபல நடிகரிடம் அடிவாங்கி பிக்பாஸ் மஹாதின் கதை.யாரிடம் தெரியுமா

தற்போது பிக்பாஸ் வீட்டில் பல சர்ச்சைகளை கிளப்பி வரும் சிம்புவின் ஆருயிர் நண்பரான மஹத், மங்காத்தா படத்தின் மூலம் சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர். அதை தொடர்ந்து ஜில்லா, சென்னை-28 செகண்ட் இன்னிங்ஸ் ஆகிய படங்களில் சிறிய வேடங்களில் நடித்துள்ளார்.

இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கில் சில படங்களில் நடித்துள்ளார், இந்நிலையில், தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகரான மனோஜ் மஞ்சுவிடம் இவர் ஒரு நாள் தர்ம அடி வாங்கியுள்ளார்.

மேலும் இதுதொடர்பாக அவரே போலிஸிடம் புகார் தெரிவித்துள்ளார், இதில் சென்னையில் நடந்த விருது விழா பார்ட்டி ஒன்றில் இருவரும் கலந்துக்கொண்டுள்ளனர்.

அப்போது நடந்த தகராறில் மனோஜ் என்ன நினைத்தார் என்று தெரியவில்லை, மஹத்தை அடித்து வெளுத்துள்ளார், என்ன காரணம் என்று தெரியவில்லை.

மேலும், உன் மரணம் என் கையில் என்பது போலவும் மஹத்திடம் மனோஜ் கூறியுள்ளதாக அந்த புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது பிக்பாஸ் வீட்டில் இருக்கும் மஹத் குறித்து பல சர்ச்சைகள் தகவல்கள் வெளிவர, இந்த செய்தி ரசிகர்கள் மத்தியில் பரவி வருகிறது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*