வெளிநாட்டு பெண்ணை ஏமாற்றி திருட்டு வாழ்க்கை..நண்பனை கணவனாக்கிய கொடூரம்.நடந்தது என்ன

தமிழ் நாட்டை சேர்ந்த தொழிலதிபர் தாய்லாந்து பெண்ணை ஏமாற்றி தனது நண்பரை கணவர் என காட்டி திருமணம் செய்துள்ளார். இதுதொடர்பாக வழக்கை சென்னை காவல் துறையினர் நடவடிக்கை எடுக்காமல் அலைக்கழிப்பதாக பாதிக்கப்பட்ட பெண் குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னை சூளையைச் சேர்ந்த மனோஜ் ஜெயின்,இவர் கடந்த 2011 ஆம் ஆண்டு பேங்காக்கில் பப் ஒன்றில் தாய்லாந்து நாட்டு பெண்ணை சந்தித்ததாகவும், அப்போது அவர் குளிர்பானத்தில் மயக்கமருந்தை கலந்து கொடுத்து அந்த பெண்ணை பலாத்காரம் செய்ததாகவும், பின்னர் திருமணம் செய்துகொள்வதாக வாக்குறுதி அளித்து அவரது நண்பர்கள் சந்தோஷ் மற்றும் விகாஸ் கோத்தாரி முன்னிலையில் பேங்காக்கில் பதிவு திருமணம் செய்துள்ளார்.

பதிவு திருமணத்தில் மனோஜ் ஜெயின் தனக்கு பதில் புரசைவாக்கத்தை சேர்ந்த தனது நண்பர் சந்தோஷை கணவர் என கையெழுத்திடவைத்து ஏமாற்றியதும் தெரியவந்தது. இதனிடையே மனோஜ் ஜெயின் மூலம் அந்த பெண்ணுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்துள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இத்தொடர்பாக இந்திய வந்து அவர்கள் மீது புகைரளித்துள்ளார் அந்த தாய்லாந்து பெண் இதையடுத்து மனோஜ் ஜெயின் மற்றும் விகாஸ் கோத்தாரியை கடந்த மே மாதம் 10 ஆம் தேதி கைது செய்த காவல்துறையினர் சிறையில் அடைக்க இருவரும் ஜாமினில் வெளிவந்து தலைமறைவாகி விட்டனர்.

இதையடுத்து மனோஜ் ஜெயின், தாய்லாந்து பெண் மற்றும் அவரது குழந்தைகளுக்கு டிஎன்ஏ பரிசோதனை செய்யுமாறு தாய்லாந்து பெண் அவரது குழந்தையுடன் சென்னை வரவழைக்கப்பட்டார்.

இந்நிலையில் மனோஜ் ஜெயின் தலைமறைவாகி விட்டதால், டிஎன்ஏ பரிசோதனை தற்போது செய்ய இயலாது என போலிசார் தாய்லாந்து பெண்ணிடம் தெரிவித்து அலைகழித்ததாக கூறப்படுகின்றது. உள்ளூர் வழக்குகளைப் போலவே விசாரணை என்ற பெயரில் இழுத்தடித்து வ்ருகிறது நமது நீதி துறை.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*