வாழ்நாள் முழுவதும் நோயிலிருந்து தப்பிக்க வேண்டுமா. இந்த மூன்று பொருளை சேர்த்தாலே போதுமாம்!

உணவே மருந்து என்ற பழமொழிகேற்ப நம் முன்னோர்கள் உணவின் மூலமாகவே பல்வேறு நோய்களைக் குணப்படுத்தி ஆரோக்கியத்துடன் திடகாத்திரமான உடல்வாகை பெற்று நீண்ட ஆயுளுடன் வாழ்ந்து வந்தார்கள்.

எந்தவித நோய்நொடியின்றி ஆரோக்கியமாக வாழ்விற்கு தேவையான பொருட்கள் வெந்தயம், ஓமம், கருஞ்சீரகம் இவை மூன்றும் மருத்துவக் குணம் கொண்ட உணவுப் பொருள்கள். வெந்தயத்தில் அதிக அளவில் இரும்புச்சத்து நிறைந்திருக்கிறது. இது பித்தத்தைக் குறைக்கும். கருஞ்சீரகம் கபத்தைக் குறைக்கும். அதேபோல் ஓமம் செரிமானத்தன்மையை மேம்படுத்தும்.

தினமும் இதனை நாம் உட்கொண்டால் பல்வேறு நோய்களை நெருங்க விடாமல் தடுத்துவிடமுடியும். ஏனெனில் பெரும்பாலான நோய்களுமே வயிற்றில் இருந்துதான் ஆரம்பிக்கின்றன. மந்தம், ஜுரம், கொழுப்பு ஆகிய அனைத்தும் ஏற்படுவதற்கான காரணம் செரிமானக் கோளாறுகள்.

வெந்தயம், ஹார்மோனைக் கட்டுப்படுத்தும், அதனால், உடல் மினுமினுப்பு உண்டாகும். மேலும், ஓமம் மற்றும் கருஞ்சீரகம் உடலுக்கு சுறுசுறுப்பைத் தரும். உடலுக்குத் தேவையான கால்சியம் மற்றும் இரும்புச்சத்துகளை இந்த மருந்துகள் கொண்டிருப்பதால் எழும்புகள் மற்றும் பற்கள் உறுதியடையும்.

வெந்தயம் கூந்தல் வளர்ச்சிக்கு இது துணைபுரியும். மலச்சிக்கல், மாதவிடாய் பிரச்னைகளையும் சரி செய்யும். மேலும் சளியால் காது அடைக்கப்பட்டு கேட்கும் திறன் குறைவாக இருந்தால் அதைச்சரி செய்யும்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*