வாழைப்பழ தோலை தூக்கி வீசுறீங்களா!!! அதுல தாங்க இருக்கு விஷயமே ..படிச்சிப்பாருங்க ஆரோக்கியமா இருங்கள் ..

வாழைப் பழத் தோல் மருத்துவப் பயன்கள் அவசியம் அறிய. கைகளிலோ,பதங்களிலோ மரசில்லுகள் அல்லது முள் குத்தினால் ,வலியில் சுருக்கென்று உயிரே போகும்படி இருக்கும்.இதனை எடுக்க முடியாமல் டாக்டரிடம் சென்று கத்தி காயங்கள் வாகியவர்களும் உண்டு இனி கவலை வேண்டாம் .

வாழை பழ தோலினை மெல்ல தடவுங்கள்.பின்னர் அந்த இடத்தை சுற்றி அழுத்தம் கொடுத்தால் எளிதில் முள் வெளியே வந்துவிடும். சோரியாசிஸ் பிரெச்சனையா ? சோரியாசிஸ் போன்ற சரும நோய்களுக்கு சருமம் சிவந்து தடித்து காணப்படும்.இதனால் எரிச்சல் உண்டாகி,பேட்ச்,பேட்ச்சாக இருக்கிறதா ?இனி சருமம் பதித்த இடங்களில் வாழைப்பழ தோலினை தேயுங்கள்.எரிச்சல் நின்று,சருமம் இயல்பு நிலைக்கு வரும் சருமத்தில் ஈரப்பதம் அளித்து,அரிப்பினை தடுக்க சிறந்த வழி இது.

மருக்கள் காணாமல் போகச் செய்ய : மருக்கள் இருந்தால் அது சரும அழகையே பாதிக்கும் இதனை போக்க மிக எளிய வழி இதுதான்.வாழைபழத் தோலினை மருக்கள் மீது வைத்து ஒரு துணியினால் கட்டி ஒரு இரவு முழுவதும் வைத்திருங்கள் நாளடைவில் மருக்கள் மாயமாய் மறைந்துவிடும். சரும அலர்ஜியா? ஏதாவது சிறு பூச்சி கடித்தால்,அல்லது வேறு பிரச்சனைகளால்,சருமம் தடித்து,அரிப்பு ஏற்படும்,எரிச்சலும் ஆகும்.வாழைபழத் தோலை பிரிட்ஜ் இல் வைத்து,அதன் பின் அதனை எரிச்சல் மற்றும் அரிப்பு இருக்கும் இடத்தில தடவுங்கள் விரைவில் நிவாரணம் கிடைக்கும் .

முகப்பருவை எதிர்க்கிறது : முகப்பருவை எளிதில் போக்க வாழைப்பழம் இருந்தால் போதும்.வாழைப்பழ தோலில் இருக்கும் ஒரு என்சைம் சருமத்தின் துவாரங்களில் சென்று பாதிக்கப்பட்ட இடத்தில் செயல் புரிகிறது. இதனால் முகப்பருக்கள் குறைந்து ,அதனால் ஏற்படும் தழும்புகளும் மறையும். வெண்மையான பற்கள் பெற : மஞ்சள் கறை இல்லாமல் வெண்மையான பற்கள் பெற எல்லாருக்கும் ஆசை.

இதற்காக பற்களை ப்ளீச் செய்யும் பேஸ்ட் ஜெல் என வாங்கி பல் கூச்சத்தைய பெற வேண்டும் ?இயற்கையான ப்ளீச்சான நம்ம வாழைப்பழ தோல் இருக்கு.பாஸ் அத எடுங்க தினமும் பல் விளக்கிய பின்,காலையிலும் இரவிலும் வாழைப்பழ தோலினை கொண்டு உங்கள் பற்களை தேயுங்கள் அப்புறம் பாருங்கள் பற்கள் மின்னும்.

வீணாய் வீசி எறியும் வாழைப்பழ தோலில் இவ்வளவு விஷயம் இருக்கிறதா என ஆச்சரியப்படுகிறீர்கள் தானே! சிறு ஆணியும் பல் குத்த உதவும் என்பதை மறக்காதீர்கள்.வாழைபழத் தோலினை வீசி எறியும் முன் மேலே சொன்ன எதற்காவது உபயோகப்படுமா என யோசித்துவிட்டு பின் எறியுங்கள்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*