குடும்பமே இப்படியா தமிழ்படம் 2 இயக்குனரின் பிறந்தநாள் கேக் பாருங்கள்

அகில உலக சூப்பர்ஸ்டார் சிவா நடிப்பில் சமீபத்தில் மிகவும் எதிர்பார்ப்புடன் வெளியாகி சக்கபோடு போட்ட படம் தான் தமிழ்ப்படம்-2.கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியான தமிழபடம்-1 தொடர்ச்சியாக இப்படியும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது

ஸ்பூப் படமான இதில் இதுவரை வெளியான படங்கள் , வெளிவர போகும் படங்கள், டாப் ஹீரோக்கள், அரசியல் பிரபலங்கள் என அனைவரையும் வைத்து ட்ரோல் செய்துள்ளனர். இந்நிலையில் இப்படத்தின் இயக்குனர் சி.எஸ்.அமுதன் நேற்று பிறந்தநாள் கொண்டாடியுள்ளார்.

இவரது பிறந்த நாளை முன்னிட்டு அவர் குடும்பம் அவருக்கு ஒரு கேக் செய்து கொடுத்துள்ளனர். அதில் “உலகம் அதிர வைக்கும் பீனிக்ஸ் பறவைக்கு Happy Birthday” என அந்த கேக்கில் குறிப்பிட்டுள்ளனர்.

அதை புகைப்படம் எடுத்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள இயக்குனர் “என் குடும்பத்துக்கு கொஞ்சம் குசும்பு ஜாஸ்தி” என கூறியுள்ளார்.அவர் பதிவிட்டுள்ள ட்வீட் இதோ

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*