தமிழ் நடிகர் நடிகைகளை தொடர்ந்து முன்னாள் முதல்வரின் புகைப்படத்தை பதிவு செய்து பரபரப்பை ஏற்ப்படுத்திய ஸ்ரீ ரெட்டி.

நடிகை ஸ்ரீ ரெட்டி தற்போது அணைத்து நடிகர் மற்றும் நடிகைகளால் பேசப்படும் ஒரு நடிகை.இவர் ஆந்திர மாநிலத்தை சேர்த்தவர் டோலிவுட்டில் கவர்ச்சி நடிகையாக வளம் வந்தவர் ஸ்ரீ ரெட்டி. ஆறு மாதங்களுக்கு முன்னர் அங்குள்ள தெலுங்கு நடிகர் சங்கம் வாயிலில் அரை நிர்வாணமாக தனி ஆளாக போராட்டத்தை கையில் எடுத்தார்.

பின்னர் அவரை முடக்க படவாய்ப்புகள் அனைத்தையும் தெலுங்கு நடிகர் சங்கம் நிறுத்தியது. தற்சமயம் அவரின் காற்று தமிழ் சினிமாவை நோக்கி வீச ஆரம்பித்தது.இவர் தன்னுடைய முகநூல் பக்கத்தில் அடுத்து அடுத்து சர்ச்சைகுரிய கருத்துக்களை பதிவிட்டு வந்த நிலையில். தான் பாலியல் ரீதியாகவும் பட வாய்ப்புகள் தருவதாக கூறி என்னை ஏமாற்றிவிட்டனர் என்று கூறிவந்த நிலையில்.

நடிகர் ஸ்ரீகாந்த் பெயரை வெளியிட்டார் பிறகு இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் பெயரை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். அதன் பின்னரும் அவர் நிறுத்தவில்லை முன்னணி நடிகர் மற்றும் டான்ஸ் மாஸ்டர் ராகவா லாரன்ஸ் பெயரை வெளியிட்டு இந்த சம்பவம் கடும் வாகுவத்திற்கு கொண்டு சென்றது.அதோடு நிறுத்தவில்லை நடிகை குஷ்பூவின் கணவர் மற்றும் இயக்குனர் சுந்தர் சி பெயரும் வெளியிட்டார்.

அதன் பிறகு அவர் சென்னை வர உள்ளதாகவும் தனக்கு நாயம் கிடைக்க நடிகர் சங்கத்தை நாடுவேன் என்றார். சென்னை வந்த அவர் இங்குஉள்ள சில முன்னணி சேனல் களுக்கு பேட்டியை குடுத்தார்.

தற்போது அவர் தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் மற்றும் முன்னாள் நடிகையுமான செல்வி.J.ஜெயலலிதா அவர்களின் புகைப்படத்தை வெளியிட்டு “அம்மா அவர்கள் உயிரோடு இருந்திருந்தால் தனக்கு நீதி கிடைத்து இருக்கும் அவர்களின் ஒரு பார்வை போதும் என்னை காப்பாற்ற.அம்மா அவர்களின் ஆசிர்வாதம் அணைத்து பெண்களுக்கும் கிடைக்கும்” என்று ஒரு ஸ்டேடஸ் ஒன்றை முகநூலில் பதிவு செய்துள்ளார்.