குழந்தையால் விமான நிலையத்தில் சண்டையா.? அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் இடையே நடந்தது என்ன.வீடியோ உள்ளெ

1994 ம் ஆண்டு உலக அழகியாக தேர்வு செய்யப்பட்டவர் ஐஸ்வர்யாராய். பின்னர் பாலிவுட் படங்களில் நடிக்க ஆரம்பித்த ஐஸ்வர்யா ராய், மற்ற பல மொழிப் படங்களிலும் நடித்து குறுகிய காலத்தில் பெரும் புகழ்பெற்றார். தமிழில் ஜீன்ஸ், இருவர், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ராவணன் போன்ற படங்கள் இவரது திறைமையை சொல்லும் படங்கள்.

இவருக்கும் நடிகர் அபிஷேக் பச்சனுக்கும் திருமணமாகி இன்றுடன் 11 ஆண்டுகள் ஆகிறது. அவர்களுக்கு ஆராத்யா என்ற மகள் உள்ளார்.சில நாட்களாக இவர்களுக்கு இடையே மனக்கசப்பு, பிரிவு என பாலிவுட் வட்டாரத்தில் சில வதந்திகள் பரவின.

இந்நிலையில் சமீபத்தில் லண்டன் சென்று திரும்பிய ஐஸ்வர்யா ராய் அமிதாப் பச்சன் மும்பை திரும்பிய போது விமான நிலையத்தில் மகள் ஆராத்யாவின் கையைப் பிடிக்க அபிஷேக் பச்சன் முயன்றார். இதற்கு ஐஸ்வர்யா ராய் அனுமதிக்கவில்லை.

இதனால் இவர்களுக்கு இடையில் சண்டை என செய்திகள் வெளியானது. ஆனால் இதை மறுத்துள்ள அபிஷேக் பச்சன், இணையதள பத்திரிகைக்கு தொடர்ந்து செய்தி வெளியிட வேண்டும் என்ற அவசியம் இருப்பதை தம்மால் புரிந்து கொள்ள முடிவதாகவும், அதே வேளையில் தவறாக செய்தி வெளியிடுவதை தவிர்க்குமாறும் ட்விட்டர் பக்கத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.

பொறுப்புடைமையுடன், தவறான நோக்கம் ஏதுமின்றி செய்தி வெளியிடும் பட்சத்தில் அதை பாராட்டுவதாகவும் அபிஷேக் பச்சன் குறிப்பிட்டுள்ளார்.சர்ச்சைக்குள்ளான அந்த வீடியோ இதோ