
நடிகர் விஜயகாந்த்தின் கலைவாரிசாக சண்முக பாண்டியன் உருவெடுத்திருக்கிறார். `சகாப்தம்’ திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகமாகிய சண்முக பாண்டியன் தற்போது ‘தமிழன் என்று சொல்’ என்ற புதுப்படத்தில் பிஸியாகிவிட்டார்.
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியான இவரின் இரண்டாவது திரைப்படம் `மதுரவீரன்’ நல்ல வரவேற்பைப் பெற்றது. மதுரவீரன் படப்பிடிப்பு முடிந்த கையோடு அடுத்த படத்தின் வேலைகள் தொடர்பாகவும் நடிப்பு பயிற்சிக்காகவும் வெளிநாடு சென்றுவிட்டார்.
ஏழு மாதங்கள் நெதர்லாந்தில் உள்ள ஆம்ஸ்டர்டாமில் கழித்த சண்முக பாண்டியன், விஜயகாந்த்தின் 40 ஆண்டுக்கால கலைத்துறை சேவைக்கான விழாவுக்குக்கூட வரவில்லை.
இந்த நேரத்தில் விஜயகாந்த் மகன் ஷண்முக பாண்டியன் ஒரு பெண்ணுடன் இருப்பது போல் சமூக வலைதளங்களில் புகைப்படம் ஒன்று வைரலானது. அந்த புகைப்படத்தில் இருப்பது யார் என்று ஆராய்ந்ததில் அவருடன் நெதர்லாந்தில் படித்த தோழியாம்.
இன்று அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி ஷண்முக பாண்டியன் அந்த பெண்ணுடன் இருந்து புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். இதைத்தொடர்ந்து மக்கள் கேப்டனின் மருமகள் இவர் தான் என பேச ஆரம்பித்துவிட்டனர்.சர்ச்சைக்குள்ளான அவரது இன்ஸ்டாகிராம் பதிவு இதோ
Leave a Reply