கலைஞர் கருணாநிதி உடல் நிலையின் உண்மை நிலை என்ன..?? அதிகார பூர்வ அறிவிப்புக்காக காத்திருப்பா???

சென்னையில் கருணாநிதி அனுமதிக்கப்பட்டுள்ள காவேரி மருத்துவமனை முன்பு கூடுதல் போலீசார் வரவழைப்பு.காவேரி மருத்துவமனை முன்பு தொண்டர்களை ஒழுங்குபடுத்தும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.காவேரி மருத்துவமனைக்குள் மயிலாப்பூர் துணை ஆணையர் சரவணன் உள்ளிட்ட காவல் அதிகாரிகள் சென்றுள்ளனர்.சென்னை துணை ஆணையர்கள் உடனடியாக தங்களது சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளுக்கு செல்ல உத்தரவு என தகவல்

அனைத்து காவல்நிலைய காவலர்களும் உஷார் நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்.காவலர்கள் அனைவரும் எழும்பூர் ஆர்.ஆர்.மைதானத்திற்கு வருமாறு காவல் கட்டுப்பாட்டு அறையில் இருந்து தகவல்கருணாநிதியின் தற்போதைய உடல்நிலை குறித்து காவேரி மருத்துவமனையில் இருந்து சற்று நேரத்தில் அறிக்கை வெளியாகிறது


தி.மு.க தொண்டர்கள் அதிக அளவில் காவேரி மருத்துவமனையை நோக்கி வந்த வண்ணம் உள்ளனர்.சேலத்தில் நாளை நடைபெற இருந்த அரசு விழாவில் பங்கேற்பதை ரத்து செய்துவிட்டு முதலமைச்சர் இன்று இரவு சென்னை திரும்புகிறார்
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோவை சென்று அங்கிருந்து விமானத்தில் இரவு சென்னை திரும்புகிறார்.

கருணாநிதியின் பேரன்கள் உள்ளிட்ட உறவினர்கள் அனைவரும் காவேரி மருத்துவமனைக்கு வருகை.காவல் ரோந்து வாகனங்களுடன் காவலர்கள் அனைவரும் ஆர்.ஆர்.மைதானத்திற்கு வருமாறு உத்தரவு என தகவல்கருணாநிதியின் இல்லத்திற்கு செல்லக்கூடிய அனைத்து வழிகளிலும் தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு பலப்படுத்தப்படுகிறது.

கருணாநிதியின் இல்லம் இருக்க கூடிய கோபாலபுரத்தில் கூடுதல் போலீசார் குவிப்பு.மருத்துவமனை அருகே தடுப்புகளை தாண்டி தொண்டர்கள் வர முடியாதபடி போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுசென்னை செல்வதற்காக சேலத்தில் இருந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோவை விமான நிலையம் புறப்பட்டார்.இதன் மூலம் கலைஞரின் உடல்நிலை சற்று பின்னடைவாகியுள்ளது என்பது வெளியாகியுள்ளது.மேலும் கலைஞரின் உடல்நிலை குறித்து பல சர்ச்சைகளை கிளப்பியுள்ளது.அதிகாரபூர்வமாக தகவல் வெளியாகும் வரை காத்திருக்க வேண்டும்

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*