சர்க்கார் பட ஷூட்டிங்கின் பொது ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கிய தளபதி விஜய் மற்றும் கீர்த்தி சுரேஷ் வீடியோ

இளையதளபதி விஜய் மற்றும் கீர்த்தி சுரேஷ் இணைத்து நடித்துவரும் படம் தான் சர்க்கார்.இப்படத்தை முன்னணி இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கி வருகிறார்.மேலும் இப்படத்தின் firstlook போஸ்டர் விஜயின் பிறந்தநாள் அன்று வெளியிட்டனர் படக்குழுவினர்.அந்த போஸ்டர் நிறைய சர்ச்சைகளுக்கு உள்ளாக்கப்பட்டது.

இதனால் அந்த போஸ்ட்டரை படக்குழுவினர் இணையத்தில் இருந்து எடுத்தனர்.ஆனாலும் சர்க்கார் படத்தின் ஆவல் இன்னும் அதிகரித்து கொண்டு தான் இருக்கிறது.கத்தி படம் ஏ ஆர் முருகதாஸ் டிரெக்ஷனில் தான் வெளியானது இது அணைத்து தரப்பு மக்களையும் உணர்ச்சிவசத்தில் ஆழ்த்தியது.

அதேபோல சர்க்கார் படமும் மக்கள் மத்தியில் ஒரு நல்ல வரவேற்பை பெரும் என்று எதிர்பார்க்க படுகிறது.இப்படத்தின் படப்பிடிப்புகள் வேகமாக நடந்து வரும் வேளையில்.படத்தின் முக்கிய காட்சி ஒன்று ஒரு கல்லூரியில் நடந்தது.இதனை அறிந்த ரசிகர்கள் அங்கு அதிக அளவில் கூடினர்.ரசிகர்கள் வெள்ளத்தில் சூழ்ந்த விஜய் சற்றும் முகம் சுழிப்பில்லாமல் சிரித்தபடியே நடந்து சென்றார்.

ரசிகர்களுக்கு எந்த அளவுக்கு மரியாதையை தருகிறார் என்பதை நாம் இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.சர்க்கார் படம் தீபாவளிக்கு வெளியிடப்படும் என்று தெரிந்த நிலையில் இதை இன்னும் படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.நிச்சயம் தீபாவளி சர்க்கார் சரவெடி வெடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*