பிரபல நடிகையின் மகள் தூக்கிட்டு தற்கொலை.அதிர்ச்சி புகைப்படம் வெளியானது

பிரபல நடிகை அன்னபூர்ணாவின் மகள் கீர்த்தி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.வரவு நல்ல உறவு, ஹேராம் போன்ற தமிழ் படங்களிலும் ஏராளமான தெலுங்கு படங்களிலும் நடித்து புகழ்பெற்றவர் நடிகை அன்னபூர்னா.இவரது வளர்ப்பு மகளான கீர்த்தி(35).

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கீர்த்திக்கும், வெங்கடகிருஷ்ணா என்ற சாப்ட்வேர் என்ஜினியருக்கும் திருமணம் நடைபெற்றது.ஹைதராபாத்தில் உள்ள பஞ்சரா ஹில்ஸ் பகுதியில் தனது கணவருடன் வசித்து வந்தார் கீர்த்தி. அவர்களுக்கு குழந்தை இல்லை.இந்நிலையில் நேற்று முன்தினம் அவரது கணவர் வேறு அறையில் தூங்க, கீர்த்தி படுக்கை அறையில் தூங்கியுள்ளார்.

காலையில் படுக்கை அறைக்கு சென்ற வெங்கடகிருஷ்ணா தனது மனைவி தூக்கில் தொங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்து மாமியாருக்கு தகவல் கொடுத்தார். அன்னபூர்ணா போலீசாருக்கு தகவல் கொடுக்க அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கீர்த்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில் கீர்த்தி நீண்ட நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால் இம்முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது.மேலும் அவருக்கு சரியாக பேச முடியாதாம்.கீர்த்தியின் மரணம் அன்னபூர்னாவை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் மன ரீதியான பிரச்சனை இருந்ததால் கடந்த 6 மாதங்களாக கீர்த்தி சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த காரணத்தால் தூக்கமின்மை, மனஅழுத்தத்தால் அவதிப்பட்டு வந்துள்ளார்.இதனால் உடல் மற்றும் மன பிரச்சனையால் அவர் தற்கொலை செய்திருக்கக்கூடும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.அவர் தற்கொலை செய்துகொண்ட புகைப்படம் இதோ

 

 

 

 

 

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*