பரபரப்பு..! கத்தியால் குத்திய இருவா்.நடிகர் பிரபுதேவக்கு நடந்த சோகம்

நடிகர் மற்றும் நடன இயக்குனரான பிரபு தேவா நடிப்பில் ‘மெர்குரி’ படத்திற்கு பிறகு யங் மங் சங், சார்லி சாப்ளின் 2, பொன் மாணிக்கவேல், காமோஷி போன்ற படங்கள் உருவாகி வருகிறது. இதில் புதுமுக இயக்குனரான எம்எஸ் அர்ஜுன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘யங் மங் சங்’ படத்தில் பிரபு தேவா குங் பூ மாஸ்டர் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். 1970-90 காலங்களில் நடக்கும் கதைகளை மையமாக வைத்து உருவாகி வரும் இந்த படத்தில் நாயகியாக நடிக்க முதலில் கேத்ரின் தெரசா ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

ஆனால் அவர் திடீரென்று விலக தற்போது லட்சுமி மேனன் நாயகியாக நடித்து வருகிறார். இவர்களுடன் பிரபல இயக்குனரான தங்கர் பச்சான் மற்றும் காமெடி நடிகரான ஆர்ஜே பாலாஜி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். மும்முரமாக நடைபெற்று இந்த படத்தின் படப்பிடிப்பில் கத்தி குத்து சம்பவம் நடந்துள்ளது

பாண்டிச்சேரி மாநிலம் வில்லியனூர் கோவிலில் அடிக்கடி படப்பிடிப்பு நடைபெறுவது வழக்கம்.உணவு இடைவேளையின் போது படக்குழுவினர் மற்றும் கோயில் தொழிலாளர்கள் அருகில் உள்ள தனியார் மண்டபம் ஒன்றில் உணவு வழங்கப்பட்டுள்ளது.

படப்பிடிப்பை பார்க்க வந்த இரண்டு பேர் தங்களுக்கும் உணவு வேண்டும் என்று கேட்டுள்ளனர். ஆனால் உணவு பரிமாற மறுக்கப்பட்டுள்ளது.இதைத்தொடர்ந்து ஏற்பட்ட தகராறில் வாழை இலையை நறுக்க வைத்திருந்த கத்தியை வைத்து உணவு பரிமாறி கொண்டிருந்த ஊழியரை குத்தியுள்ளனர்.

இதில் காயமடைந்த ஊழியர் சிகிச்சைக்காக புதுவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.கத்தியால் குத்திய இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இதைத்தொடர்ந்து இப்படத்தின் ஹீரோ மற்றும் தயாரிப்பாளரான பிரபு தேவாவிற்கு சில சட்ட சிக்கல்களை உருவாகியுள்ளது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*