பிரபல தொலைக்காட்சிக்கு அடித்த அதிஷ்டம்! பெண்களிடம் அத்து மீறும் போட்டியாளர்கள்? அம்பலப்படுத்திய அதிர்ச்சி புகைப்படம்

பிக் பாஸ் நிகழ்ச்சியை ஒளிபரப்புவதால் பிரபல தொலைக்காட்சிக்கு அதிஷ்டம் தேடி வருவது போல டி ஆர் பி எகிறி கொண்டே போகிறது.வீட்டில் தொடர்ந்து நான்கு வாரங்களாக ஐஸ்வர்யா காப்பாற்றப் பட்டு வருகிறார். பிக் பாஸ் வீட்டின் முக்கிய போட்டியாளர்களில் ஒருவர் ஐஸ்வர்யா.கடந்த சீசனைப் போலவே நிகழ்ச்சி தொடங்கியதும், அவருக்கும், ஷாரீக்கிற்கும் காதல், கசமுசா என கொளுத்திப் போட்டார்கள். ஓவியா-ஆரவ் காதல் போல் இதுவும் பரபரப்பாகும் என எதிர்பார்த்தால், அப்படியே காட்சி மாறியது.

இந்நிலையில், தற்போது பிக் பாஸ் வீட்டின் இந்த வார தலைவியாக இருக்கிறார் ஐஸ்வர்யா. அதுதவிர சர்வாதிகாரி டாஸ்க் மூலம் வீட்டையே அதகளப் படுத்தி கெட்டப் பெயர் சம்பாதித்து வருகிறார்.நேற்று முன் தினம் பாலாஜி மீது குப்பையைக் கொட்டிய ஐஸுக்கு எதிராக சமூகவலைதளங்களில் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டது.

நேற்றும் செண்டுவுடன் மோதல், மும்தாஜை சிறையில் அடைத்தது, பொன்னம்பலத்திடம் விசாரணை என பல்வேறு அலப்பறைகளை அரங்கேற்றினார் ஐஸு. சர்வாதிகாரி என்ற போர்வையில் அவர் தனது வஞ்சங்களை போட்டியாளர்கள் மீது காட்டி வருகிறார்.இதற்கு முன்னர் வரை, வீட்டில் அனைவரும் அவரை குழந்தைப்புள்ள என செல்லமாக கொஞ்சிக் கொஞ்சிக் கொண்டிருந்தனர். ஆனால், தற்போது அவரின் இந்த நடவடிக்கையால் வீட்டில் உள்ளோர் அவர் மீது கடும் கோபத்தில் உள்ளனர். ஆனால், திஸ் பீஸ் ஐ வாண்ட் என சக போட்டியாளர்களின் கோபத்தைத் தூண்டும் ஐஸுவைக் காப்பாற்ற பிக் பாஸ் தன்னால் இயன்ற அனைத்து வேலைகளையும் செய்து வருகிறார்.

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் அவர் சகபோட்டியாளர்களால் நாமினேட் செய்யப்பட்டு, எவிக்சன் பிராசஸ்சுக்கு சென்றார். ஆனால் அந்த வாரம் அவர் காப்பாற்றப்பட்டார். அதனைத் தொடர்ந்து அவருக்கு அளிக்கப்பட்ட சூப்பர் பவர் மூலம் அடுத்த வாரம் தன்னைத் தானே அவர் காப்பாற்றிக் கொண்டார்.

இந்நிலையில் இந்த வாரம் வீட்டின் தலைவியாகி இருப்பதால் அவரை சக போட்டியாளர்கள் நாமினேட் செய்ய முடியாது. அதே போல், சர்வாதிகாரி டாஸ்க்கை சரிவர செய்து முடித்தால், அவருக்கு தரப்படும் இம்யூனிட்டி பவர் மூலம் அடுத்த வாரமும் அவரை நாமினேட் செய்ய இயலாது என பிக் பாஸ் தெரிவித்துள்ளார்.வீட்டில் உள்ள மற்ற போட்டியாளர்களுக்கு அளிக்காத சிறப்புச் சலுகையை தொடர்ந்து ஐஸுவுக்கு பிக் பாஸ் அளித்து வருவது மக்களிடையே எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.

சர்வாதிகாரி டாஸ்க்கில் அவர் செய்யும் கொடுமைகளால் கொந்தளிக்கும் சக போட்டியாளர்கள் நிச்சயம் அடுத்த வாரம் அவரைத் தான் நாமினேட் செய்ய நினைப்பார்கள். ஆனால், அவர்களுக்குத் தெரியாது அடுத்த வாரமும் ஐஸுவை நாமினேட் செய்ய இயலாது என்பது.

கடந்த சீசனில் காதல் பிரச்சினையால் ஓவியா பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறியதால், நிகழ்ச்சியின் சுவாரஸ்யம் சற்று குறைந்து போனது. பார்வையாளர்களின் எண்ணிக்கையும் குறைந்தது. எனவே இம்முறை அப்படி நிகழாமல் இருக்கத் தான் ஐஸுவை இப்படி அரும்பாடு பட்டு காப்பாற்றி வருகிறார் பிக் பாஸ்.

இதையெல்லாம் பார்க்கும்போது, ‘மருத்துவ முத்தம்’ மாதிரி ஏதோ ஒரு பெரிய பிளானில் பிக் பாஸ் இருக்கிறார் என்பது மட்டும் நன்றாகத் தெரிகிறது.

இதேவேளை, தற்போது சமூகவலைத்தளங்களில் தீயாய் புகைப்படம் ஒன்று பரவி வருகின்றது. இதில் பெண்களுடன் பிக்பாஸ் போட்டியாளர்கள் அத்து மீறுவது போல காணப்படுகின்றது.இந்நிலையில், இதுவும் ஏதாவது ஒரு டாஸ்க்கா? இல்லை பிக்பாஸ் இல்லத்தில் வெடித்திருக்கும் புதிய சர்ச்சையா என்பது இன்று மட்டும்தான் தெரியும்?