ஐஸ்வர்யாவின் ஆட்டத்திற்கு கிடைத்த தண்டனை..! பிக்பாஸ் வீட்டிற்குள் டிடி,ஆர்யா மற்றும் சதிஷ்

பிக்பாஸ் வீட்டில் ராணியாக வலம்வந்து தனது அராஜகத்தை சக போட்டியாளராகிய மக்களிடம் வெளிக்காட்டிய ஐஸ்வர்யாவின் நேற்றைய நிலை பரிதாபமாக மாறியது. பொன்னம்பலம் ஐஸ்வர்யாவை கழுத்தில் கையை வைத்து அவரை நீச்சல் குளத்தில் தள்ளிவிட்டார். அதன்பின்பு பிக்பாஸிடம் ஐஸ்வர்யாக விடாமல் கதறி அழுதார்.அதற்கு பிக்பாஸ் என்ன செய்யப்போகிறார் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த தருணத்தில் இன்றைய ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது.

இதில் பொன்னம்பலத்தினை வீட்டை விட்டு தனிமைப்படுத்தி வைத்துள்ளனர்.தற்போது வெளியான இரண்டாவது ப்ரொமோவில் கஜினிகாந்த் படத்தின் விளம்பரத்தை முன்னிட்டு ஆர்யா,டிடி,சதிஷ் ஆகியோர் பிக்பாஸ் வீட்டிற்கு வந்துள்ளனர். அதுமட்டுமின்றி ஐஸ்வர்யா கையில் குளுக்கோஸ் ஏற்றியதற்காக நீடிலும் உள்ளது.

இதிலிருந்து நேற்றைய நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார் என்று தெரிகிறது.தற்போது மூன்றாவது ப்ரொமோவில் ஐஸ்வர்யா ஒன்று அவங்க இருக்கனும் இல்ல நான் இருக்கனும் என்று கூறி ஆவேசப்பட்டுள்ளார்.

வேலிலிருக்கும் போதே சதிஷ் பிக்பாஸ் போட்டியாளர்களை ட்விட்டரில் கலைத்துத்தள்ளுவார் இந்நிலையில் இன்று நிகழ்ச்சியில் நகைச்சுவை மற்றும் பரபரப்பிற்கு பஞ்சமிருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.வைரலாகி வரும் ப்ரோமோ வீடியோ இதோ

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*